டிரைவிங் லைசென்சுக்கு ஆதார் கட்டாயமா?
டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கும் போதும், வழங்கும் போதும் ஆதார் எண்ணை கேட்டு வாங்க மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம் ஒரே நபர் பல இடங்களில் லைசென்சு வாங்குவது, போக்குவரத்து குற்றங்களிலிருந்து தப்பிக்க போலி லைசென்ஸ் வாங்குவதை தடுக்க முடியும்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. டிரைவிங் லைசென்ஸ் வழங்குவது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்தாலும், வெவ்வேறு மாநிலங்களில்,வெவ்வேறு ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மூலம் பல லைசென்ஸ் வாங்குவதை தடுக்க இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நடைமுறை வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.