ஒரு வருடத்திற்குள் ஆதரவு வாபஸ் - பா.ஜ.க-வை மிரட்டும் சிவசேனா
அடுத்த ஒரு வருடத்திற்குள் பா.ஜ.க கூட்டணியில் இருந்து சிவசேனா கட்சி வெளியேறும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார்.
சமீப காலமாக பாரதிய ஜனதா அரசை சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்வது வருகிறது.. மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் அகமத்நகரில் இருந்து 240 கி.மீ. தொலைவில் நடைபெற்ற ஒரு பேரணியில் கலந்துக்கொண்ட சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்யா தாக்கரே கூறியதாவது,
மகாராஷ்டிராவில் நடந்து வரும் பா.ஜ.க, சிவசேனா கூட்டணி ஆட்சியில் இருந்து அடுத்த ஒரு வருடத்திற்குள் பா.ஜ.க கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறும். அடுத்த நடக்கும் தேர்தலில் சிவசேனா தனித்து போட்டியிடும். மாநிலத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது நம்ம கட்சி தான் என்று கூறினார்.
ஆதித்யா கூறியதை பார்த்தால், 2019-ம் ஆண்டின் லோக் சபா தேர்தலில் தனித்து போட்டியிடும் மனநிலையில் சிவசேனா இருப்பதாக தெரிகிறது. மகாராஷ்டிராவில் நடந்து ஆட்சியில் பா.ஜ.க.-வுடன் கூட்டணி வைத்திருந்தாலும், மும்பை நகரசபைத் தேர்தல்களில் கூட சிவசேனா தனித்து போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.