பார்லிமென்ட் 21 செயலாளர்கள் நியமித்த விவகாரம் டில்லி ஐகோர்ட், நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பார்லிமென்ட்டில் 21 செயலாளர்களை நியமித்து. இந்த விவகாரம் எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், 21 செயலாளர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 


டில்லியில் துணைநிலை ஆளுனருக்கான அதிகாரத்தை எதிர்த்து டில்லி கெஜ்ரிவால் அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், துணைநிலை ஆளுனருக்கே கூடுதல் அதிகாரம் என தீர்ப்பு கூறப்பட்டது. 


பஞ்சாப் மாநிலத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் செல்வதற்காக புது டில்லி ரயில் நிலையத்திற்கு வந்த முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்த்து பா.ஜனதா மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெண்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது என்று கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பூ, வளையல் போன்றவற்றை கெஜ்ரிவாலுக்கு பரிசளிக்கவும் முயன்ற அவர்கள், கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


மேலும் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி உள்ளனர்.