தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்: ஆம் ஆத்மி MLA கோரிக்கை
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் தொற்று பரவல் மோசமடைந்துள்ளது. தலைநகர் தில்லியிலும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள், மருந்துகள் போன்றவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு என்ற நிலை உள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் தொற்று பரவல் மோசமடைந்துள்ளது. தலைநகர் தில்லியிலும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள், மருந்துகள் போன்றவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு என்ற நிலை உள்ளது.
இந்தநிலையில், தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான சோயிப் இக்பால், தனது வீடியோ பதிவின் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். அதில் அவர், தில்லியில் (Delhi) குடியரசுத் தலைவர் ஆட்சியை (Persident Rule) அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆம் ஆத்மி MLA சோயிப் இக்பால் தனது வீடியோ பதிவில், “டெல்லியில் நிலைமை மிக மோசமாக உள்ளது. என்னால் தூங்க முடியவில்லை. மக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் கிடைக்கவில்லை. எம்.எல்.ஏ.வாக இருப்பதற்கு இன்று நான் வெட்கப்படுகிறேன். எங்களால் உதவ முடியவில்லை; அரசினாலும் உதவ முடியவில்லை. நான் ஆறுமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தவன். இருந்தபோதிலும், எனக்கே யாரும் பதிலளிக்கவில்லை. எந்த அரசு அதிகாரியையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு தில்லி உயர் நீதிமன்றத்திடம் நான் கோர விரும்புகிறேன். இல்லையெனில் சாலையில் சடலங்களைத் தான் பார்க்க முடியும்" என கூறியுள்ளார்.
ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning
தேசிய தலைநகரில் வியாழக்கிழமை கொரோனா வைரஸ் (Corona Virus) காரணமாக 395 பேர் இறந்ததாக பதிவாகியுள்ளன, இது ஒரு வருடத்திற்கு முன்னர் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து பதிவான மிக அதிக அளவாகும், மேலும் 24,235 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. பரிசோதனை செய்யப்பட்டவர்களில், 32.82 சதவீதம் பேருக்கு தொற்று இருப்பதாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 காரணமாக டெல்லி 300 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்வது தொடர்ச்சியாக இது எட்டாவது நாளாகும்.
தில்லியில் தற்போது COVID-19 நோயாளிகள் 97,977 பேர் சிகிச்சையில் உள்ளனர். தில்லியின் மருத்துவமனைகளில் 21,152 படுக்கைகளில், 1,628 மட்டுமே காலியாக உள்ளன. மொத்தம் 53,440 நோயாளிகள் வீட்டில் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர் என்று சுகாதார அமைச்சக தகவல் தெரிவித்துள்ளது.
ALSO READ | கொரோனா காலத்தில் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 மருத்துவ கருவிகள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR