குஜராத் தேர்தல் களத்தில் முதல்முறையாக களமிறங்கிய 24 வயது இளைஞர் ஹர்திக் படேல் தனது தீவிர பிரச்சாரம் மூலம் பட்டியன் இனத் தலைவராக முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலுக்கு அடுத்தபடியாக முடிசூடியுள்ளார். குஜராத் சட்டசபை தேர்தலுக்காக ஹர்திக் படேலும், அவருடைய படிதார் அனமத் அந்தோலன் சமிதியும் கடினமாக உழைத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் விஜய் ரூபானியின் ராஜ்கோட் மேற்கு தொகுதியிலேயே பிரச்சார பொதுக்கூட்டங்களை நடத்தி  மக்களை கூட்டத்தை கூட்டி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியவர். மாநிலம் முழுவம் பட்டியல் இன மக்களை சந்தித்து தேர்தலில் அனைவரும் ஒற்றமையுடன் இருக்க வேண்டும் என்று ஹர்திக் முன்வைத்து வந்தார்.இதனால் ஹர்திக்கின் புகழ் பரவியது.


தனது பிரச்சாரத்தின் போது பாஜக ஹட்வா மற்றும் லேவா இன மக்களை பிரிக்க நினைக்கிறது. நமது வாக்குகளை பிரித்து, நம்மை அதிகாரமற்றவர்களாக ஆக்க நினைக்கிறது, அவர்களின் எண்ணத்தை தகர்த்தெறிய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.


கஜராத் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில், சுயேச்சையாகப் போட்டியிட்ட தலித் உரிமைச் செயற்பாட்டாளரான ஜிக்னேஷ் மேவானி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரைவிட 18,150 வாக்குகள் அதிகம் பெற்று, சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகியுள்ளார்.


ஹர்திக் படேல் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்; சூரத், ராஜ்கோட், அகமதாபாத்தில் மின்னணு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன.  


குஜராத்தின் எந்த தொகுதிகளில் 1,000 அல்லது 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி நிர்ணயமாகிறதோ அங்கெல்லாம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக பட்டிதார் இனத் தலைவர் ஹர்திக் படேல் குற்றம்சாற்றியுள்ளார்.


மேலும் அவர், பாரதீய ஜனதாவுக்கு 100க்கும் குறைவான இடங்கள் கிடைத்துள்ளதே எங்களுக்கு கிடைத்த வெற்றி என கூறினார்.