ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் ஷோபியானில் (Shopian) பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ஒரு பிராந்திய இராணுவ வீரரின் உடைகள் வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டன. அவரது வீட்டிலிருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூன்று வெவ்வேறு இடங்களில் அவரது ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷோபியானின் ரெஷிபோரா கிராமத்தைச் சேர்ந்த பிராந்திய இராணுவ வீரர் ஷாகிர் மன்சூர் (Shakir Manzoor) ஆகஸ்ட் 2 ஆம் தேதி கடத்தப்பட்டார். அதே நேரத்தில், எரிக்கப்பட்ட அவரது கார் குல்காம் (Gulgam) மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.


காணாமல் போன வீரரின் உடைகள் அவரது வீட்டிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள மற்றொரு கிராமமான லாண்டூராவில் ஒரு பழத்தோட்டத்திற்கு அருகில் மூன்று வெவ்வேறு இடங்களில் காணப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.


முஹம்மது அப்சல் என்ற ஒரு மூத்த உள்ளூர்வாசி, லண்டூரா பழத்தோட்டங்களில் மூன்று வெவ்வேறு இடங்களில் ஒரு சட்டை, பேன்ட் மற்றும் டி-ஷர்ட்டைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.


காணாமல் போன வீரரின் குடும்பத்தினர் துணிகள் ஷகீருக்கு சொந்தமானவைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அவர் கடத்தப்பட்ட நாளில் அவற்றை அணிந்திருந்ததாகவும் அப்சல் கூறினார்.


பாதுகாப்புப் படையினர் மற்றும் SOG பணியாளர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த படைகள் உடனடியாக பழத்தோட்டத்திற்கு சென்றதாகவும், அவர்களிடம் கடத்தப்பட்ட வீரருக்கு சொந்தமான டி-ஷர்ட் மற்றும் பிற பொருட்கள் ஒப்படைத்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.


இதற்கிடையில், கடத்தப்பட்ட வீரரின் தந்தை மன்சூர் அகமது, அவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருந்தால், அவரது இறுதி சடங்கிற்காக பயங்கரவாதிகள் அவரது உடலை திருப்பித் தர வேண்டும் என்றும், அவர் உயிருடன் இருந்தால், அவர்கள் அவரை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


தனது மகனைக் கடத்தவில்லை என்று பயங்கரவாதிகள் அறிக்கையை வெளியிட்டால், தான் மற்ற வகைகளில் அவரைத் தேடத்தத் துவங்க அது வழி வகுக்கும் என்று அவர் கூறினார்.


ALSO READ: Sopore Terrorist Attack: காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல், ஒருவர வீரமரணம்


ஷகீர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிராந்திய இராணுவத்தில் சேர்ந்தார், ஸ்ரீநகரில் பணியமர்த்தப்பட்டார். அவரது குடும்பத்தின்படி, அவர் நான்கு நாட்களுக்கு முன்பு ஷோபியானில் உள்ள பால்போரா இராணுவ முகாமில் பணியில் இருந்தார்.


அவர் கடத்தப்பட்ட பின்னர், இந்திய இராணுவமும் போலீசாரும் ஷகீரைக் கண்டுபிடிப்பதற்கான தேடலைத் தொடங்கினர்.


ALSO READ: ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்; எச்சரிக்கும் உளவுதுறை...