புதுடெல்லி: அபுதாபி இளவரசரும், ஆயுதப் படையின் துணைத் தலைமை தளபதியுமான ஷேக் முகம்மது ஜாயேத் அல் நல்யான் மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று முதல் அவர் மூன்று நாட்ளுக்கு அரசு முறை பயணத்தில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாளை மறுநாள் நடக்கவுள்ள இந்தியாவின் குடியரசு தின நிகழ்ச்சியில் அவர் விருந்தினராக கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


இந்த பயணத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று மதியம் நேரில் சந்தித்து, ஒப்பந்தங்கள் சிலவற்றுக்கு ஷேக் கையெழுத்திட உள்ளார் என அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.


துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியை இன்று மாலை லீலா பாலஸ் ஹோட்டளில் ஷேக் சந்திக்கிறார் பின்னர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ராஷ்டிரபதி பவனில் சந்திக்க உள்ளார்.