Video: ஏசி வெடித்தால் நொய்டா அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!
Massive Fire In Noida: நொய்டா குடியிருப்பு வளாகத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த ஏசியில் உள்ள கம்ப்ரசர் வெடித்ததால் பெறும் தீ விபத்து.
AC Blast at Noida Residential Society: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 100ல் உள்ள லோட்டஸ் பவுல்வர்டு சொசைட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏர் கண்டிஷன் யூனிட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அடுக்குமாடி முழுவதும் தீ பரவியது. அங்கு இருந்த உயரமான கட்டிடங்களை சுற்றி கரும் புகை போல காட்சியளித்தது.
நொய்டா தீ விபத்தால் மக்கள் பீதி
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், குடியிருப்பாளர்களிடையே ஒருவித பீதி ஏற்பட்டு உள்ளது.
நொய்டா தீ விபத்து: விரைந்த தீயணைப்பு வாகனங்கள்
நொய்டாவின் செக்டார் 100ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. கட்டிடத்தின் கட்டமைப்புக்கு பெரிய சேதம் ஏதும் ஏற்படாமல் தீயை வெற்றிகரமாக தீயணைப்பு துறையினர் கட்டுப்படுத்தினர்.
நொய்டா தீ விபத்து: காயம், உயிர்சேதம் இல்லை
இந்த சம்பவம் குறித்து நொய்டாவின் தலைமை தீயணைப்பு அதிகாரி (CFO) பிரதீப் குமார் கூறுகையில், இந்த தீ விபத்தை அடுத்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. தீ முழுவதும் அணைக்கப்பட்டது. ஸ்பிலிட் ஏசியில் உள்ள கம்ப்ரசர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை காயம் அல்லது உயிர்சேதம் இல்லை என்று கூறினார்.
நொய்டா தீ விபத்து: வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்
இந்த தீ விபத்தை அடுத்து முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் புகை மூட்டத்தை கண்டவுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
வைரலாகும் நொய்டா தீ விபத்து வீடியோ
இந்த தீ சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில் லோட்டஸ் பவுல்வர்டு சொசைட்டியில் உள்ள உயரமான கட்டிடங்களைச் சுற்றி அடர்ந்த புகை மூட்டங்கள் சூழ்ந்திருப்பத்தை காணலாம்.
தற்போது தீ அணைக்கப்பட்டு விட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் செக்டார் 39 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது.
மேலும் படிக்க - கெட்டுப்போன முட்டையில் மயோனிஸ்? 'குழிமந்தி பிரியாணி' சாப்பிட்ட பெண் பலி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ