கொச்சி: பாரிஸில் 2003 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற அஞ்சு பாபி ஜார்ஜ், திங்களன்று தான் வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தன்னுடைய வெற்றியின் போதும், விளையாட்டில் பல உச்சங்களை அடைந்தபோதும் தனக்கு ஒரு சிறுநீரகம்தான் இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் வெளியிட்ட ஒரு ட்வீட்டில், IAAF உலக தடகள இறுதிப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற (மொனாக்கோ, 2005) அஞ்சு, அவருக்கு அந்த நேரத்தில் பல தடைகள் இருந்ததாகவும் வலி ​​நிவாரணி மருந்துகளுக்கு ஒவ்வாமையும் இருந்ததாகவும் கூறினார்.


"பலரால் இதை நம்ப முடியாமல் போகலாம். ஆனால், நான் மிக அதிர்ஷ்டசாலி. ஒரே ஒரு கிட்னி, வலி நிவாரணிக்கு கூட ஒவ்வாமை, மந்தமான கால்கள்…..இப்படி பல தடைகள் என் முன் இருந்தன. ஆனாலும் என்னால் உலக தர வரிசையில் உச்சியை எட்ட முடிந்தது. இதை என் பயிற்சியாளரின் மாயமென்று சொல்வதா அல்லது திறமை என்று சொல்வதா” என்று அஞ்சு ட்வீட் செய்துள்ளார்.



அஞ்சு பாபி ஜார்ஜின் (Anju Bobby George) கணவர் ராபர்ட் பாபி ஜார்ஜின் பயிற்சியின் கீழ் அவரது விளையாட்டும் அவரது வாழ்க்கையும் மலர்ந்தன.


அவரது ட்வீட்டுக்கு பதிலளித்த மத்திய விளையாட்டு அமைச்சர் கிரென் ரிஜிஜு (Kiren Rijiju), அஞ்சு தனது கடின உழைப்பு, திடம் மற்றும் உறுதியின் மூலம் இந்தியாவுக்கு பல பெருமைகளை சேர்த்துள்ளார் என கூறினார்.


"அஞ்சு, உங்கள் கடின உழைப்பு, திடம் மற்றும் அர்ப்பணிப்பும், பயிற்சியாளர்கள் மற்றும் முழு குழுவின் உதவியும் இந்தியாவுக்கு (India) பல பெருமைகளைத் தேடித் தந்தன. உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் நீங்கள் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்!” என்று அமைச்சர் அஞ்சுவின் ட்வீட்டுக்கு அளித்த பதில் ட்வீட்டில் தெரிவித்தார்.



IAAF உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் (பாரிஸ், 2003) இந்தியா சார்பில் பதக்கம் வென்ற ஒரே வீரர், IAAF உலக தடகள இறுதிப் போட்டிகளில் (மொனாக்கோ, 2005) தங்கப் பதக்கம் வென்றவர், தன் கரியர் முழுவதும் சீரான செயல்பாட்டை வெளிப்படுத்தியவர் என்ற பெருமைகளுக்கு உரியவரான அஞ்சு, நாட்டின் மிக உன்னதமான விளையாட்டு வீராங்கனை என இந்திய தடகள கூட்டமைப்பு கூறியது.


ALSO READ: அன்புக்கு அப்பா, ஆட்டத்துக்கு விராட் கோலி என்று கூறுகிறாராம் இந்த cricketer-ன் மகன்


2004 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் (Olympic Games) 6.83 மீட்டர் தனிப்பட்ட பாய்ச்சலுடன் அவர் ஆறாவது இடத்தைப் பிடித்தார். ஆனால் 2007 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மரியான் ஜோன்ஸ் ஒரு ஊக்கமருந்து குற்றத்திற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவர் ஐந்தாவது இடத்திற்கு உயர்த்தப்பட்டார்.


"2002 ஆம் ஆண்டில் பூசனில் நடந்த ஆசிய விளையாட்டுப் (Asian Games) போட்டிகளில் 6.53 மீட்டர் உயரத்தில் அவர் தங்கப்பதக்கம் வென்றது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் விஷயங்களின் ஆரம்ப அறிகுறியாக இருந்தது. 1996 ஆம் ஆண்டில் 5.98 மீ ஜம்பரில் இருந்து, அவரது உயர்வு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது. ஆனால் கணவர் ராபர்ட் பாபி ஜார்ஜின் பயிற்சியின் கீழ் அவர் ஒரு முழுமையான தடகள வீரராக பரிமளித்தார்” என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


ALSO READ: விராட் கோலி துரிதமாக 22,000 சர்வதேச ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR