நடப்பு ஆண்டில் ஜிடிபி 6.75% முதல் 7.5% ஐ எட்டுவது கடினம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது பார்லிமென்ட்டில் மத்திய நிதி அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பொருளாதார அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது. அதில்,


ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ரூபாய் மதிப்பீடு, விவசாய கடன் தள்ளுபடிகள், மின்துறை, தொலை தொடர்புதுறை, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் நிலையற்ற தன்மை மற்றும் நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. பணக்கொள்கை பொருளாதார வளர்ச்சியை மேலும் பாதித்துள்ளது.


ஜனவரியில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 6.75% முதல் 7.5% வரையிலான வளர்ச்சியை எட்டியது. ஆனால் நடப்பு நிதியாண்டின் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையால் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சரிவை கண்டுள்ளது. 


கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் பாக்கிகள், அதிக அளவிலான கடன் தொகையால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.


ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு போக்குவரத்தை எளிமையாக்குவதற்காக சோதனை சாவடிகள் நீக்கப்பட்டதால் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. 


இது குறுகிய கால நெருக்கடி என்பதால் விரைவில் சரிசெய்யப்படும். பணவீக்கமும் எதிர்பார்த்ததை விட குறைந்துள்ளது. 


இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.