புது டெல்லி: சர்ச்சைக்குரிய ஆர்வலர் ரெஹானா பாத்திமா தனது குழந்தைகள் அரை நிர்வாண உடலின் வரைந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது வீடியோ வெளியிட்ட சர்ச்சை புகழ் ரெஹானா பாத்திமா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ரெஹானா பாத்திமா 2018 இல் சபரிமலைச் சுவாமி ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய திட்டமிட்டவர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜகவின் ஓபிசி மோர்ச்சா தலைவர் ஏ.வி. அருண் பிரகாஷ் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் அடிப்படையில், பதானம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவாலா போலீசார், ரெஹானா மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.


அந்த வீடியோ #BodyArtPolitics என்ற ஹேஷ்டேக்குடன்  'பாடி அண்டு பாலிடிக்ஸ்' என்ற தலைப்பில் பகிரப்பட்டு இருந்தது. இப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அடுத்த 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய கேரள மாநில போலீஸ் கமிஷனரும், பதனம்திட்டா மாவட்ட போலீஸ் கமிஷனரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


 


READ | சபரிமலை சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா ஏன் கைது செய்யப்பட்டார்!


 


சமூக ஊடகங்களில் ரெஹானா பகிர்ந்த வீடியோவில், ரெஹானா படுக்கையில் அரை நிர்வாணமாக படுத்துக் கொண்டிருக்கும்போது, ​​அவரது குழந்தைகள் அவரது உடலில் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோவை பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் பகிர்ந்த ரெஹானா பாத்திமா, தனது கண்கள் தொற்றியதால் தான் ஓய்வெடுப்பதாகவும், அவரது குழந்தைகள் உடலில் ஓவியம் வரைந்து வருவதாகவும் எழுதினார். 


தற்போது இந்த விவகாரணம் தொடர்பாக கேரளாவில் சர்ச்சை வெடித்தது. தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவராத வகையில் அவர் மீது திருவல்லா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


அதற்கு முன்பே, சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான புகைப்படங்களைப் பகிர்ந்ததற்காக ரெஹானா பாத்திமா 18 நாட்கள் சிறையில் கழித்திருந்தார்.