மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதி வழங்குவதாக அறிவிப்பு....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மக்கள் பெருந்துயரத்திலும்  பேரழிவிற்கும் ஆளாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. தற்போது வெள்ளம் வடிய துவங்கி விட்ட நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பி வருகின்றனர். 


இதனால் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு பல்வேறு மாநில அரசுகள், பிரபலங்கள், மக்கள் ஆகியோர் தங்களால் இயன்ற நிதியுதவியும், பொருட்களையும் அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடியை நிவாரண நிதியாக கேரளாவுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். வரும் சனிக்கிழமை கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.