ஹைதராபாத்: திரைப்பட ஹீரோக்கள் சிலர் தங்கள் நிஜ வாழ்க்கையில் தாங்கள் செய்யும் சில நிஜ செயல்களால் நிஜ ஹீரோக்களாகிறார்கள். நாம் வாழும் உலகின் மீதும் சமூகத்தின் மீதும் தங்களுக்கு இருக்கும் அக்கறையை சில ஹீரோக்கள் அவ்வப்போது காட்டிக்கொண்டுதான் இருகிறார்கள். பிரபல தெலுங்கு நடிகர் பாகுபலி புகழ் பிரபாஸ் (Actor Prabhas) அப்படியொரு செயலை தற்போது செய்துள்ளார். அவர், ஹைதராபாத்தின் (Hyderabad) புறநகரில் 1,650 ஏக்கர் ரிசர்வ் காடுகளை தத்தெடுக்க முன்வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘பாகுபலி’ புகழ் நடிகர் திங்கள்கிழமை துண்டிகல் அருகே அவுட்டர் ரிங் சாலையில் உள்ள காசிப்பள்ளி ரிசர்வ் காடுகளை அபிவிருத்தி செய்வதற்காக வன அதிகாரிகளுக்கு ரூ .2 கோடி காசோலையை வழங்கினார்.


பிரபாஸ் மற்றும் தெலுங்கானா வனத்துறை அமைச்சர் அல்லோலா இந்திர கரண் ரெட்டி, மாநிலங்களவை எம்.பி. ஜோகினபள்ளி சந்தோஷ்குமார் ஆகியோர் நகர்ப்புற வன பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினர். அவர்கள் தற்காலிக கண்காணிப்புக் கோபுரத்திலிருந்து ரிசர்வ் காடுகளை (Reserve Foest) பார்வையிட்டனர். பின்னர் ரிசர்வ் வனப்பகுதியில் சில மரக்கன்றுகளை நட்டனர்.


சந்தோஷ்குமார் ஊக்குவித்த பசுமை இந்தியா சவாலின் கீழ் பிரபாஸ் இந்த முயற்சியை மேற்கொண்டார்.


வனத்துறை ரிசர்வ் காடுகளின் ஒரு சிறிய பகுதியை நகர்ப்புற வன பூங்காவாக மாற்றும். மீதமுள்ள வனப்பகுதிகள் பாதுகாப்பு மண்டலமாக இருக்கும்.


காசிப்பள்ளி ரிசர்வ் காடு (Khazipally Reserve Forest) அதன் மருத்துவ தாவரங்களுக்கு பெயர் பெற்றது மற்றும் இது மூன்று பிரிவுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வனத்துறை 1,650 ஏக்கர் முழுவதையும் வேலி அமைத்து உடனடியாக ஒரு சுற்றுச்சூழல் பூங்காவை (Eco Park) உருவாக்கத் தொடங்கவுள்ளது. ஒரு பூங்கா வாயில், வெளியிலிருந்து பார்க்கக்கூடிய சுவர், நடை பாதை, வியூ பாயிண்ட், கெஸெபோ மற்றும் மருத்துவ தாவர மையம் ஆகியவை கட்டப்படும்.


காசிபள்ளி வனப்பகுதியை தத்தெடுக்க தனது நண்பர் சந்தோஷ்குமாரால் தான் ஈர்க்கப்பட்டதாகவும், பணியின் முன்னேற்றத்தைப் பொறுத்து மேலும் நன்கொடை அளிக்கவுள்ளதாகவும் பிரபாஸ் கூறினார்.



ALSO READ: இனி மாணவர்களுக்கு உதவ முன்வரும் இந்த மாஸ் நடிகர், விரைவில் பெரிய அறிவிப்பு...


ஹைதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (HMDA) வரம்புகளில் கூடுதல் பசுமை மண்டலங்களை (Green Zone) உருவாக்கி சுற்றுச்சூழல் பூங்காவை உருவாக்கும் வகையில் ரிசர்வ் காடுகளை அபிவிருத்தி செய்யுமாறு வனத்துறையை அவர் கேட்டுக்கொண்டார்.


சந்தோஷ்குமார் கடந்த ஆண்டு கீசரா ரிசர்வ் வனப்பகுதியை தத்தெடுத்து, ரிசர்வ் வன மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவின் புத்துயிர் பணிகளுக்கு அடித்தளம் அமைத்தார். ரிசர்வ் காடுகளை தத்தெடுப்பதில் பங்கேற்குமாறு தனது நண்பர்களை ஊக்குவிப்பேன் என்று அவர் கூறியிருந்தார்.


மிக விரைவில் பல தொழிலதிபர்கள் ரிசர்வ் வனத் தொகுதிகளை தத்தெடுக்க முன்வருவார்கள் என்று எம்.பி. கூறினார்.


பிரபாசின் இந்த செயல், அவரது ரசிகர்களாலும், இன்னும் பலராலும் மிகவும் பாராட்டப்பட்டு வருகின்றது. அவரது இந்தச் செயல், அவரது ரசிகர்களின் கவனத்தையும் சுற்றுசூழல் பராமரிப்பு பக்கம் நிச்சயமாகத் திருப்பும்.