காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் உர்மிளா மாடோண்ட்கர்!
மகாராஷ்டிராவில் காங்கிரசுக்கு ஏற்பட்ட மற்றொரு அடி... பாலிவுட் நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய உர்மிளா மாடோண்ட்கர் செவ்வாய்க்கிழமை கட்சியில் இருந்து விலகினார்.
மகாராஷ்டிராவில் காங்கிரசுக்கு ஏற்பட்ட மற்றொரு அடி... பாலிவுட் நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய உர்மிளா மாடோண்ட்கர் செவ்வாய்க்கிழமை கட்சியில் இருந்து விலகினார்.
மக்களவை தேர்தலுக்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் கட்சியில் சேர்ந்த உர்மிளா, ஐந்து மாத காங்கிரஸ் பயணத்திற்கு பின்னர் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
சிறிய அரசியல் காரணங்களால் தான் கட்சியை விட்டு விலகுவதாக ஊர்மிளா தெரிவித்துள்ளார். "எனது அரசியல் மற்றும் சமூக உணர்வுகள் கட்சியில் உள்ள அதிகாரங்கள் புறக்கணிக்கிறது. ஒரு பெரிய வேலை செய்வதற்குப் பதிலாக உட்கட்சி பூசலை எதிர்த்துப் போராடுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. மும்பை காங்கிரசில் இலக்கை எட்ட முயன்று ஏமாற்றங்களுடன் விடைபெறுகிறேன்" என ஊர்மிளா தெரிவித்துள்ளார்.
மேலும் மே 16 அன்று மும்பை முன்னாள் காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோராவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் எழுப்பிய கவலைகளை கவனிக்கவில்லை என்று ஒரு கடிதத்தில் மாடோண்ட்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை காங்கிரஸ் பொறுத்தவரையில்., கடந்த சில தினங்களாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. கட்சியின் தலைமையை தேர்ந்தெடுப்பதில் துவங்கி பல இன்னல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது உர்மிளா மாடோண்ட்கரின் ராஜினாமா மகாராஷ்டிராவில் காங்கிரசுக்கு ஏற்பட்ட மற்றொரு அடியாகவே கருதப்படுகிறது.
மும்பை வடக்கிலிருந்து மக்களவைத் தொகுதியில் உர்மிளா மாடோண்ட்கர் போட்டியிட்டார், ஆனால் பாஜக-வின் கோபால் ஷெட்டியிடம் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.