பெங்களூர்: பழம்பெரும் நடிகை கிருஷ்ண குமாரி (வயது-85) உடல் நலக்குறைவால் பெங்களூரில் இன்று (ஜன., 24) காலமானார். நடிகை கிருஷ்ண குமாரி நடிகை சவுகார் ஜானகியின் சகோதரி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவர் கிருஷ்ணகுமாரி. இவர் 1951-ம் ஆண்டு நவிதே நவரத்னலு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரும்பிப்பார், மனிதன், கற்கோட்டை, புதுயுகம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். 


1960-70-களில் பிரபல நாயகியாக திகழ்ந்த கிருஷ்ண குமாரி, அன்றைய ஜாம்பவான் ஹீரோக்களான என்டி.ராமாராவ், அக்கினினேனி நாகேஸ்வரராவ், கிருஷ்ணம் ராஜூ, ராஜ்குமார், சிவாஜி உள்ளிட்டவர்களுடன் நடித்திருக்கிறார். கிருஷ்ணகுமாரியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.