கோவா திரைப்பட விழாவில் நடிகை பார்வதிக்கு சிறந்த நடிகைக்கான விருது!

கோவா சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்தது. இவ்விழாவில் சிறந்த நடிகைக்கான விருது நடிகை பார்வதி-க்கு வழங்கப்பட்டது.
சர்வதேச இந்திய திரைப்பட விழா இந்த ஆண்டு கோவாவில் கடந்த 20-ம் தேதி துவங்கியது. இது 48-வது திரைப்பட விழாவான இதில், சுமார் 200 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டது.
இறுதி நாளான நேற்று, அமிதாப் பச்சன், சல்மான் கான், கேத்ரினா கைப், குரேஸி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் மலையாளத்தில் வெளியான, டேக் ஆப் என்ற படத்தில் நடித்ததற்காக நடிகை பார்வதி சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.