ஆதித்ய சச்தேவா கொலை வழக்கு: ராக்கி உட்பட 3 பேர் குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு
பீகாரில் ஆதித்ய சச்தேவாவை சுட்டுக்கொன்ற வழக்கில் ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் மனோரமா தேவியின் மகன் ராக்கி யாதவ் உட்பட மற்ற மூன்று பேர் குற்றவாளி என கயா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இவர்களுக்கான தண்டனை வரும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான மனோரமா தேவியின் மகன் ராக்கி(வயது 30) காரில் சென்றபோது, அவரது காரை பின்னால் வந்த கார் முந்திச் சென்றது. இதனால், ஆத்திரமடைந்த ராக்கியும் முந்திச் சென்ற காரில் இருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். இந்த தகராறில் ராக்கி துப்பாக்கியால் சுட்டதில் தொழிலதிபர் மகனான ஆதித்ய சச்தேவ்(வயது1 9) உயிரிழந்தார்.
இவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடந்த ஒரு வருடமாக நடைபெற்ற வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.