புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமியின் வீட்டிற்கு சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரண்பேடி பதவியேற்று தற்போது இரண்டாண்டு நிறைவடைகின்றது. இதற்கான பல்வேறு நிகழ்ச்சிகள் ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகின்றது. கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்தும் அதை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தார்கள். இந்நிலையில் வழக்கமாக ஆளுநர் மாளிகையில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமி வீட்டிற்கு சென்றார்.


இதையடுத்து, தகவலறிந்த நாராயணசாமி ஆளுநர் கிரண்பேடியை சந்தித்தார். நாளை பிறந்தநாள் காணும் நாரணசாமிக்கு கிரண்பேடி வாழ்த்து சொல்லி பொன்னாடை போர்த்தியுள்ளார். பிறகு கிரன்பேடிக்கு நாராயணசாமி பொன்னாடை அணிவித்தார். 


பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கிரண்பேடி சபாநாயகர் வீட்டிற்கு சென்றார் அங்கு அவருக்கு பொன்னாடை அணிவித்தார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆளுநராக இருக்க மாட்டேன் என்று கிரண்பேடி ஏற்கனவே சொன்னபடி செய்ய வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வலியுருத்தி வந்த நிலையில், கிரண்பேடியே முதல்வர் வீட்டிற்குக்கும், சபாநாயகர் வீட்டிற்கும் சென்று வந்த நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது!