ராஜ்தாக்கரே கட்சிக்கு மார்கண்டயே கட்ஜூ எச்சரிக்கை `நானும் ரவுடி தான்`
இந்தியாவில் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ராஜ் தாக்கரே கட்சியினருக்கு முன்னாள் நீதிபதி மார்கண்டயே கட்ஜூ எச்சரிக்கை.
பிரஸ் கவுன்சில் தலைவராக இருந்த போது மார்கண்டயே கட்ஜூ பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பசுவதை மற்றும் மாட்டுக்கறி தொடர்பான விவாதம் போதும் கட்ஜூவின் கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், யூரி தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவில் நிகழ்ச்சி நடத்தவும், பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த படங்களை இந்தியாவில் வெளியிடவும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மார்கண்டயே கட்ஜூ தனது சமுக வலை பக்கத்தில் கூறியுள்ளதாவது:- மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர் ரவுடிகள். இவர்கள் அரபிக்கடலின் உப்பு நிறைந்த தண்ணீரை குடிக்கின்றனர். நான் நதி தண்ணீர் குடித்த அலகாபாத் ரவுடி. பாகிஸ்தான் கலைஞர்களிடம் மோதாமல், என்னுடன் மோதுங்கள். யார் பெரிய ரவுடி என்பதை உலகம் பார்க்கட்டும் என்று தனது பக்கத்தில் கூறியுள்ளார்.
இதேபோல முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரும் தனது டுவிட்டர் பக்கத்தில் நவநிர்மான் சேனா நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது சமுக வலை பக்கத்தில் கூறியுள்ளதாவது:- இவர்கள் இன்னும் பாடம் கற்கவில்லை. வன்முறை அச்சுறுத்தல் செய்யும் இவர்கள் அடுத்து வரும் தேர்தலில் பூஜ்ஜியம் தான் பெறுவார்கள் என்று தனது பக்கத்தில் கூறியுள்ளார்.