புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசம் சென்றதில் இருந்து, இந்தியா உட்பட பல நாடுகள் தங்கள் குடிமக்களை அங்கிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை, இந்தியா காபூலில் இருந்து 222 பேரை இரண்டு விமானங்கள் மூலம் மீட்டு தாயகம் அழைத்து வந்துள்ளது. இதற்கிடையில், மத்திய அமைச்சர், ஹர்தீப்சிங் பூரி, ஆப்கான் நெருக்கடி நிலை குடியுரிமை திருத்த சட்டத்தின் அவசியத்தை உணர்த்துகிறது என்றார் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'குடியுரிமை திருத்த சட்டத்தின் அவசியம்'


மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஆப்கானிஸ்தானில் (Afghanistan) உள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு வந்தது குறித்த  செய்திகளைப் பகிர்ந்துகொண்டு, ட்விட்டரில் செய்த பதிவில், 'நமது அண்டை நாட்டில் உள்ள நெருக்கடி நிலை மற்றும் சமீபத்திய சம்பவங்கள்  சீக்கியர்களும் இந்துக்களும் மிகவும் மோசமாக சூழ்நிலையை எதிர்கொள்ளும் நிலை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ( CAA) அவசியத்தை தெளிவாக எடுத்துக் கூறுகிறது என்றார்.


ALSO READ | ஆப்கானிஸ்தானில் சிக்கிய 168 பேருடன் காசியாபாத் வந்தடைந்தது இந்திய சிறப்பு விமானப்படை


குடியுரிமை திருத்த சட்டம் (CAA) என்றால் என்ன?


குடியுரிமை திருத்தச் சட்டத்தில், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் மற்றும் பாகிஸ்தானின் சிறுபான்மை இனத்தை  (இந்து, சீக்கியர், பவுத்தர், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்துவர்) சேர்ந்த குடியேறியவர்களுக்கு இந்தியாவின் குடியுரிமை வழங்குவதற்கான அம்சம் உள்ளது. தற்போதைய சட்டத்தின்படி, ஒரு நபர் இந்தியாவின் குடியுரிமையைப் பெற குறைந்தபட்சம் கடந்த 11 ஆண்டுகளாக இங்கு வசிப்பது கட்டாயமாகும். ஆனால் CAA  சட்டத்தின் மூலம் விதியை தளர்த்துவதன் மூலம், குடியுரிமை பெறும் கால வரம்பு ஒரு வருடம் முதல் 6 ஆண்டுகள் வரை என குறைக்கப்பட்டுள்ளது. எளிமையாகச் சொன்னால், இந்தியாவின்  இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட அண்டை நாடுகளில், இன்னல்களை அனுபவித்து வரும்  சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான விதி எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. சிஏஏ சட்டம் 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | ஆப்கானிஸ்தானை கட்டமைப்பது எங்கள் வேலை அல்ல: ஜோ பைடன்


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR