கொரோனா தொற்று காரணமாக, பல வித பக்க விளைவுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. காணப்படாத, அறியப்படாத பல விஷயங்களை நாம் எதிர்கொள்கிறோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாக கோவிட் -19 நோயாளிகளில் Black Fungus எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று காணப்படுகின்றது. இந்த நோய் அரிதானதாகவும், சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால் மிகவும் ஆபத்தானதாகவும் அறியப்படுகின்றது. இது மியூகோர்மைசீட்ஸ் (mucormycetes) எனப்படும் பூஞ்சைக் குழுவால் ஏற்படுகிறது.  இதனால் கண்பார்வை பறி போகலாம் அல்லது உயிரிழப்பும் ஏற்படலாம்.


இந்நிலையில், தற்போது, கருப்பு பூஞ்ஞையை விட ஆபத்தான வெள்ளை பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது, ​​பீகாரில் உள்ள பாட்னாவில், நான்கு பேருக்கு வெள்ளை பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன.


இப்போது, ​​பீகாரில் உள்ள பாட்னாவில், நான்கு பேருக்கு வெள்ளை பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன.
கருப்பு பூஞ்சை தொற்றுநோயை விட வெள்ளை பூஞ்சை தொற்று மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இது நுரையீரலை தவிர,  நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம், மூளை, அந்தரங்க உறுப்புகள் மற்றும் வாய் ஆகிய பகுதிகளையும் பாதிக்கிறது.


ALSO READ | Vaccine Tourism: ரஷ்யாவிற்கு தடுப்பூசி சுற்றுலா ஆஃபர்; இந்தியர்களுக்கு சிறப்பு சலுகை


 


முன்னதாக கருப்பு பூஞ்சை குறித்து தெர்வித்த மருத்துவர்கள் "இந்த நோய் புதியதல்ல. ஆனால் இது இந்தியாவில் COVID-19 நோயாளிகளிடையே அதிகரித்து வருகிறது. ஏனெனில் ஸ்டெராய்டுகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  சில சந்தர்ப்பங்களில் பார்வை இழப்பு மற்றும் இறப்புக்கு இது வழிவகுக்கிறது. கருப்பு பூஞ்சை  மூளையை அடைந்தால், அது அபாயகரமானதாக இருக்கும்” என கூறினர். ஆனால், உடனேயே கவனித்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்தி விடலாம்.  கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணம்டைந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | கோவிட் நோயாளிகளைத் தாக்கும் Black Fungus தொற்று எவ்வளவு ஆபத்தானது?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR