Anil Chauhan next Chief of Defence Staff: இந்திய அரசு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை (ஓய்வு) பாதுகாப்புப் படைகளின் அடுத்த தலைமை அதிகாரியாக (சிடிஎஸ்) பாதுகாப்புத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. இந்திய அரசின் ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் பணியாற்றுவார் என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்ததை அடுத்து அந்த பதவி காலியாக இருந்தது. அதாவது சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு நியமனம்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யார் இந்த அனில் சவுகான்?


பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், " ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையில், லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் பல துறைகளில் பணியாற்றி உள்ளர். ஜம்மு & காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் விரிவான அனுபவம் பெற்றவர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மே 18, 1961 இல் பிறந்த லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் தேசிய பாதுகாப்பு அகாடமி, கடக்வாஸ்லா (புனே) மற்றும் டேராடூன் இந்திய இராணுவ அகாடமி ஆகியவற்றில் தனது கல்வி பயணத்தை மேற்கொண்டார்.


இந்திய இராணுவத்தில் அனில் சவுகான் வகித்த பதவிகள்:


1981 இல் இந்திய இராணுவத்தின் 11 கோர்க்கா ரைபிள்ஸில் பணியமர்த்தப்பட்டார். அவர் மேஜர் ஜெனரல் பதவி வகிக்கும் போது வடக்கு மண்டல பாரமுலா பிரிவில் இருக்கும் காலாட்படைக்கு நியமிக்கப்பட்டர். பின்னர் அவர் வடகிழக்கில் ஒரு படைக்கு மாற்றப்பட்டார். பின்னர் செப்டம்பர் 2019 முதல் கிழக்கு மண்டல கட்டளையின் தலைமைத் தளபதியாக ஆனார். மே 31, 2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை இந்தப் பொறுப்பை வகித்தார்.


அனில் சவுகான் பெற்ற பதக்கங்கள்:


இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், தேசிய பாதுகாப்பு மற்றும் நலனில் அவர் தொடர்ந்து பங்களித்தார். இராணுவத்தில் அவரது புகழ்பெற்ற சேவைக்காக பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம், உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விசிட்ட சேவா பதக்க, சேனா பதக்கம் மற்றும் விசிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ