50 நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்ட பிரதமர் மோடி - முதல்வர் உத்தவ் தாக்கரே
முதல்வராக பதவியேற்ற பின்னர் உத்தவ் தாக்கரே முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அனைவரும் சிரித்த முகத்துடன் இருந்தனர்.
புனே: முதல்வராக பதவியேற்ற பின்னர் உத்தவ் தாக்கரே முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை புனே விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார். இதன் பின்னர், இரு தலைவர்களும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸும் கலந்து கொண்டார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிகாரப்பகிர்வு போட்டியின் காரணமாக பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையிலான கூட்டணி முறிந்தது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். உத்தவ் தாகரே பாஜகவுடனான தனது உறவை முடித்துவிட்டு, காங்கிரஸ் மற்றும் என்சிபியின் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான அரசாங்கத்தை அமைத்த பின்னர் இரு தலைவர்களின் முதல் சந்திப்பு இதுவாகும்.
பங்கேற்க பிரதமர் மோடி காவல்துறை தேசிய மாநாட்டில் கலந்துகொள்ள புனே சென்றடைந்தார். அவரை வரவேற்க தான் மாநில முதலமைச்சர் விமான நிலையம் சென்றுள்ளார். பிரதமரை வரவேற்ற பின்னர் தாக்கரே மும்பைக்குச் சென்றார் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யரி, பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரும் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர். அந்த சமயத்தில் அனைத்து தலைவர்களும் சிரித்தபடி காணப்பட்டனர்.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 145 எண்ணிக்கையை விட அதிகமான 169 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான "மகா விகாஸ் அகாதி" அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை வென்றது. மகாராஷ்டிராவின் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு 105, சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44 இடங்கள் கிடைத்தன. மற்ற இடங்களில் சுயேச்சை மற்றும் சிறு கட்சிகள் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.