குஜராத் கிராம மக்களின் 625 கோடி ரூபாய் மின்சார கட்டண பாக்கி, ஒரே தீர்வுகாணும் திட்டத்தின் கீழ் தள்ளுபடி.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி வாகை சூடியது. நீண்ட இழுபறிக்கு பின்னர், மூன்று மாநிலங்களுக்கான முதலமைச்சர்களை காங்கிரஸ் தேர்வு செய்து அறிவித்தது.


இதையடுத்து, மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி பதவியேற்றார். இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 100 யூனிட்டுகளுக்கு கட்டணம் கிடையாது என்பது போன்றதொரு, சலுகைத் திட்டத்தை குஜராத் மாநில அரசு அறிவித்திருக்கிறது. மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அமைந்திருக்கும் புதிய காங்கிரஸ் அரசாங்கங்கள், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கும் நிலையில், காந்தி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் அமைச்சர் செளரப் பட்டேல் (Saurabh Patel) கிராம பகுதிகளில் உள்ள 6 லட்சத்து 20 ஆயிரம் பேர், செலுத்த வேண்டிய 625 கோடி ரூபாய் மின்சார கட்டண பாக்கி, ஒரே தவணையில் தீர்வுகாணும் திட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்படுவதாக கூறியிருக்கிறார்.



மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள், வெறும் 500 ரூபாய் மட்டும் செலுத்தி, தங்கள் இணைப்பை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என்றும், செளரப் பட்டேல் தெரிவித்திருக்கிறார்.