ரபேல் ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் பற்றி முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் அறிந்திருந்தார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) நாக்பூர் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதம மந்திரி நரேந்திர மோடி போர்க்கால விமான கொள்முதல் ஒப்பந்தத்தை மாற்றியன் காரணமாக தான் விலை அதிகரித்தது. ராகுல் காந்தி குற்றம் சாட்டினார், "பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆவணப்படி, நரேந்திர மோடி அசல் ஒப்பந்தத்தில் மாற்றத்தை உருவாக்கி, ஒரு ரபேல் விமானத்தை 1600 கோடி ரூபாய்க்கு வாங்கினார் என்று கூறுகிறது." எனவும் ராகுல் கூறினார்.


அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனம் பாதுகாப்பு விமானங்கள் உற்பத்தி தொழில்துறையில் நிபுணத்துவம் பெற்றதில்லை. அவரது வியாபாரம் தோல்வி அடைந்தது, அவரிடம் பணம் இல்லை. ஆனாலும் அவர் இன்று நாட்டின் "மிகப்பெரிய" பாதுகாப்பு ஒப்பந்தத்தை பெறுகிறார்.


பொருளாதரா நிபுணர்களுடனான கலந்து ஆலோசித்து தான் "குறைந்த வருவாய் உத்தரவாதம் திட்டம்" இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், இந்த திட்டத்தின் கீழ் ஏழை இந்தியர்களின் கணக்கில் 72 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறினார்.


மேலும் நான் பிரதமர் நரேந்திர மோடி மாதிரி பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவன் அல்ல. பிரதமர் மோடி பொய்யை மட்டும் நம்புகிறார். ஆனால் நாங்கள் விசுவாசம் மற்றும் நம்பகத்தன்மையான வாக்குறுதிகளை மட்டும் கொடுப்போம். குறைந்த வருவாய் உத்தரவாதம் திட்டத்தின் ஏழை குடும்பங்களுக்கு ரூ. 72 ஆயிரம் அளிக்கப்படும். இந்த திட்டத்தின் செயல்பாட்டை பொருளாதாரம் பாதிக்காது என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.


பி.ஜே.பி வெற்று வாக்குறுதிகள் தருகிறது. காங்கிரஸ் நாட்டு மக்களுக்கு வேலை செய்ய விரும்புகிறது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.