இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் நகரமான ஜோஷிமத், கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜோஷிமத் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக "புதைந்து கொண்டிருக்கிறது". இந்நிலையில்  கர்னபிரயாகை நகரிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. பகுகுணா நகர் பகுதியில் சுமார் 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, கர்ன்பிரயாகில் உள்ள சிவில் அதிகாரிகள் உதவிக்காக முதல்வர் புஷ்கர் சிங் தாமியை அணுகியுள்ளனர். அப்பகுதியில் பல சிறிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோஷிமத்தில் உள்ள பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு பகுதிகளில் தங்கியுள்ள தங்கள் உறவினர்களுடன் தஞ்சம் புகுந்துள்ளனர். கர்னபிரயாகையில்,  பஜார் பகுதியில் உள்ள சுமார் 30 குடும்பங்களும் பேரழிவு ஆபத்தில் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மாநில அரசிடம் உதவி கோருவதாகத் தெரிகிறது.


இதற்கிடையில், ஜோஷிமத் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், சாமோலி பேரிடர் மேலாண்மை தொடர்பான அறிவிப்பு ஒன்றை திங்கள்கிழமை வெளியிட்டது. ஜோஷிமத் நகரப் பகுதியில் மொத்தம் 678 கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்தி ஒன்று தெரிவிக்கிறது. பாதுகாப்பு கருதி மொத்தம் 81 குடும்பங்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர்.


"ஜோஷிமத் நகரப் பகுதியின் கீழ், 213 அறைகள் தற்காலிகமாக வாழத் தகுந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் 1191 பேர் தங்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது, இதனுடன், ஜோஷிமத் பகுதிக்கு வெளியே உள்ள பிபால்கோட்டியில் 491 அறைகள்/ஹால்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, இதில் 2,205 பேர் தங்களாம்" என்று செய்தி ஒன்று  கூறுகிறது.



மேலும் படிக்க | பேரிடர் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது ஜோஷிமடம்! மக்களை வெளியேற்றும் அரசு


நிர்வாகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப உணவுப் பொருட்கள் மற்றும் போர்வைகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுப் பொருட்களுக்கான நிதி ஒரு குடும்பத்திற்கு 5,000 ரூபாய் வீதம் விநியோகித்துள்ளது. உள்ளூர் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள உத்தரகாண்ட் அரசாங்கம்,  நிலம் சரிவு தொடர்பாக, ஜோஷிமத்தில், சாத்தியமான அபாயத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் திங்களன்று தெரிவித்தார்.


நகரின் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜோஷிமத் பகுதி பேரிடர் பாதிப்புக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமோலி மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, ஜோஷிமத் நகரில் இதுவரை 603 கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய முன்னேற்றங்கள் காரணமாக, நிர்வாகம் நகரத்தை 'ஆபத்து', 'பஃபர்' மற்றும் 'முற்றிலும் பாதுகாப்பான' மண்டலங்களாக மூன்று மண்டலங்களாகப் பிரித்துள்ளது.


மேலும் படிக்க | Joshimath Sinking: பூமியில் புதைந்து கொண்டிருக்கும் உத்தராகண்ட் ஜோஷிமத் நகரம்! வெளியேறும் மக்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ