3 மாநிலத் தேர்தல் வெற்றிக்குப் பின் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது தங்கை பிரியங்கா குழந்தைகளுடன் இமாச்சலப் பிரதேசத்துக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார்... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் சென்ற மாதம் 12 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ஆம் தேதி முடிவடைந்தது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 


இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. 5 மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தெலங்கானாவில் TRS கட்சியும், மிசோராமில் MNF கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. இதை தொடர்ந்து, காங்கிரஸ் வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களின் முதல்வர்கள் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி முதல்வராக பதவியேற்றனர்.  


இதை தொடர்ந்து, 3 மாநிலத் தேர்தல் வெற்றிக்குப் பின் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது தங்கை பிரியங்கா மற்றும் அவரது குழந்தைகளுடன் இமாச்சலப் பிரதேசத்துக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். 


அரசியல் பரபரப்பைத் தவிர்த்து அமைதியாகப் பொழுதுபோக்குவதற்காகக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இமாச்சலப் பிரதேசத்துக்குச் சென்றுள்ளார். அவருடன் தங்கை பிரியங்காவும் அவரது குழந்தைகளும் சென்றுள்ளனர். சாரப்ரா என்னுமிடத்தில் கட்டப்பட்டு வரும் பிரியங்காவின் வீட்டைப் பார்வையிடச் சென்ற அவர்கள் வழியில் சாலையோர உணவகத்தில் அமர்ந்து தேநீர் பருகியதுடன் தின்பண்டங்களையும் சுவைத்து மகிழ்ந்தனர்.


அப்போது அங்குவந்த மக்கள் ராகுலுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். ராகுலின் பயணம் தனிப்பட்டது என்பதால் இது குறித்து மாநிலக் காங்கிரஸ் தலைவருக்குக் கூடத் தெரிவிக்கப்படவில்லை.