சூரிய நமஸ்காரத்தை உலக அளவில் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி
யோகாவுக்குப் பிறகு, சூரிய நமஸ்காரத்தையும் உலக அளவில் கொண்டு செல்லும் வகையில், மகர சங்கராந்தி அன்று சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புது தில்லி: ஆயுஷ் அமைச்சகம் (Ministry of AYUSH) 14 ஜனவரி 2022 அன்று உலகளவில் 75 லட்சம் பேர் பங்கேற்கு வகையில் உலகளாவிய சூரிய நமஸ்கார செயல் விளக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை அளிப்பதற்காக 'இயற்கை அன்னைக்கு' நன்றி தெரிவிப்பதை இந்த நிகழ்வு நினைவுபடுத்துகிறது. இந்த நாளில் சூரிய நமஸ்காரம் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனின் ஒவ்வொரு கதிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் செயலாக சூரிய நம்ஸ்காரம் இருக்கும்.
சூரிய நமஸ்காரம் ஆற்றலை அளிக்கிறது
முதன்மையான ஆற்றலின் மூலமாக இருக்கும் சூரியன், தாவரங்கள் உணவு தயாரிக்க மிக முக்கியமானது என்பது மட்டுமல்ல, மனிதனின் மனதையும் உடலையும் செயல்படுத்தும் முக்கிய ஆற்றலாக இருக்கிறது.
ALSO READ | கொரோனா பெருந்தொற்று பரவல்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!
விஞ்ஞான ரீதியாக, சூரிய நமஸ்காரம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், உயிர்ச்சக்தியை மேம்படுத்தவும் அறியப்படுகிறது, இது இந்த தொற்றுநோய் சூழ்நிலையில் நமது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மனித உடல் சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி பெறுகிறது. இதனை உலகெங்கிலும் உள்ள அனைத்து மருத்துவ துறைகளாலும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சூரிய நமஸ்காரம் மூலம் வழங்கப்படும் செய்தி
சூரிய நமஸ்காரத்தில் பொது மக்களை ஈடுபடுத்துவதற்கான நோக்கம் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் பற்றிய செய்தியை மக்களுக்கு இதன் மூலம் தெரிவிப்பதாகும். காலநிலை விழிப்புணர்வு அவசியமான இன்றைய காலகட்டத்தில், அன்றாட வாழ்வில் சூரிய மின் ஆற்றலை (பசுமை ஆற்றல்) பயன்படுத்துவதால், பூமியை அச்சுறுத்தும் கார்பன் வெளியேற்றம் கணிசமாகக் குறையும்.
மகர சங்கராந்தி நாளில் சூரிய நமஸ்காரம்
கூடுதலாக, இந்த நிகழ்வு நமது கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தில் மகர சங்கராந்தியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சூரிய நமஸ்காரம் என்பது உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து 12 நிலைகளில் செய்யப்படும் 8 ஆசனங்களின் சேர்க்கை. இது பெரும்பாலும் அதிகாலையில் செய்யப்படுகிறது.
ALSO READ | இதுதான் முக்கியம்.. IHU மாறுபாட்டின் புதிய அறிகுறிகள்.. கவனம்!
ALSO READ | Omicron: அறிகுறிகள் என்ன? எவ்வளவு நாட்களில் தெரியும்? முக்கிய தகவல்கள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR