புதுடெல்லி: உபி மாநிலம் ஆக்ரா-லக்னோ இடையே 302 கி.மீ. தொலைவுக்கு எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் கனவுத்திட்டமான இத்திட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த எக்ஸ்பிரஸ்வே சாலையானது இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்தியாவின் நீண்ட எக்ஸ்பிரஸ்வே சாலையான இந்த சாலையை உ.பி. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் திறந்துவைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுடன், ராம் கோபால் யாதவ், ஷிவபால் யாதவ், தர்மேந்திர யாதவ்,  பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.


இந்திய விமானப்படைக்கு சொந்தமான 8 போர் விமானங்களை தரையிறக்கி சோதனை செய்தனர். போர் போன்ற அவசரகாலங்களில் போர் விமானங்களை இயக்குவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு மே மாதம் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையிலும் இதேபோன்று இந்திய விமானப்படை போர் விமானத்தை தரையிறக்கி சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.