ஆக்ரா: தாஜ்மஹாலின் 370 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக சொத்து வரி மற்றும் தண்ணீர் கட்டணத்திற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆக்ரா நகராட்சி இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு (ASI) தாஜ்மஹால் கட்டிடத்திற்கான சொத்து வரி மற்றும் தண்ணீர் கட்டணம் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய தொல்லியல் துறை இந்த நிலுவைத் தொகையை 15 நாட்களுக்குள் செலுத்துமாறு ஆக்ரா நகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் வரி செலுத்தப்படாவிட்டால் சொத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இருப்பினும், தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் இது தவறுதலாக அனுப்பட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளனர். விரைவில் இது சரிசெய்யப்படும் என்று நம்புகிறோம் என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் ரூ.1.40 லட்சம் சொத்து வரி மற்றும் தண்ணீர் வரியாக ரூ.1 கோடி செலுத்துமாறு ஏ.எஸ்.ஐக்கு அனுப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து, ASI கண்காணிப்பு தொல்லியல் ஆய்வாளர் (ஆக்ரா வட்டம்) ராஜ் படேல் கூறுகையில், “தண்ணீர் வரிக்கானநோட்டீஸும், சொத்து வரிக்கான நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. சொத்து வரி சுமார் ரூ.1.40 லட்சம் மற்றும் தண்ணீர் வரி சுமார் ரூ.1 கோடி” என்றார்.


மேலும் படிக்க: மலிவான கட்டணத்தில் விமான டிக்கெட்டுகள் வாங்க ஜோதிராதித்ய சிந்தியா வழங்கிய டிப்ஸ்!


யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசின் பல்வேறு பிரிவுகளால் நிலுவையில் உள்ள பில்கள் தொடர்பான நோட்டீஸ்களில், இதுவரை தாஜ்மஹாலுக்கு இரண்டு மற்றும் ஆக்ரா கோட்டைக்கு மூன்று நோட்டீஸ்கள் வந்துள்ளன. இது குறித்து மேலும் கூறிய படேல், “தாஜ்மஹாலைப் பொறுத்தவரை, எங்களுக்கு இரண்டு நோட்டீஸ்கள் வந்துள்ளன, ஒன்று சொத்து வரி மற்றும் மற்றொன்று நீர்வளத்து துறையிடம் மொத்தம் 1 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என ஏஎஸ்ஐயிடம் கோரப்பட்டுள்ளது” என்றார்.


"முதலாவதாக, நினைவுச்சின்ன வளாகங்களுக்கு சொத்து வரி அல்லது வீட்டு வரி பொருந்தாது. உத்தரபிரதேச சட்டங்களிலும் இதற்கான அம்சங்கள் உள்ளது. மற்ற மாநிலங்களிலும் உள்ளது. தண்ணீர் தொடர்பான நோட்டீஸை பொறுத்தவரை, கடந்த காலங்களில் இதுபோன்ற நோட்டீஸ்கள் வந்ததில்லை. மேலும் வணிக நோக்கத்திற்கும் பயன்படுத்தும் குடிநீர் இணைப்பு எதுவும் எங்களிடம் இல்லை. தாஜ் வளாகத்திற்குள் நாங்கள் பராமரிக்கும் புல்வெளிகள் பொது சேவைக்காக உள்ளன. மேலும் நிலுவைத் தொகை பற்றிய பேச்சே இல்லை, ” என்று அவர் மேலும் கூறினார். தாஜ்மஹால் 1920 இல் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கூட, நினைவுச்சின்னத்திற்கு வீடு அல்லது தண்ணீர் வரி விதிக்கப்படவில்லை என்று ASI அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க: இருமல் சிரப் அருந்திய பின் நின்று போன 2 வயது குழந்தையின் இதயம்! நடந்தது என்ன!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ