அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் கிறிஸ்டியன் மைக்கேலை, மேலும் 4 நாட்கள் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் CBI-க்கு அனுமதி! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், குடியரசுத் தலைவர் பிரதமர் போன்றோருக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது.


இதில் இடைத் தரகராக செயல்பட்டவர் பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டின் மைக்கேல். அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து சுமார் 225 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக மைக்கேல் மீது CBI, அமலாக்கத்துறை போன்றவை குற்றம் சாட்டியுள்ளன. அந்தத் தொகை அப்போதைய ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருக்கு கைமாறியதாகவும் கூறப்படுகிறது.


இதுதொடர்பான வழக்கில், இந்தியப் புலனாய்வு நிறுவனங்களால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டவர். இந்நிலையில் துபாயில் கைது செய்யப்பட்ட மைக்கேலை விசாரணைக்காக அனுப்பி வைக்கும்படி இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று, அவரை அனுப்பிவைக்க துபாய் நீதிமன்றம் அனுமதியளித்தது. 


இதையடுத்து, இந்தியா அழைத்துவரப்பட்ட கிறிஸ்டின் மைக்கேல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணை நடை பெற்றுகொண்டிருக்கும் நிலையில், இன்று அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை, மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது.


5 நாள் காவல் முடிந்ததை அடுத்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அவரை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது விமானப்படை அதிகாரிகள் 2 பேர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கு விமான பயண செலவாக 92 லட்சம் ரூபாயை  2009 - 2013 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மைக்கேல் வழங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மேலும் மைக்கேலை மும்பைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 5 நாட்கள் காவலை நீட்டிக்க அனுமதி கோரப்பட்டது. அதன்பேரில் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம், மைக்கேலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற அவரது வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்தது.