இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பயணிக்க வெறும் ரூ.3000 செலுத்தினால் போதும் என NHSRCL தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது. இந்த புல்லட் ரயிலில் பயணிக்க பயணிகளிடம் குறைந்தது ரூ.250 துவங்கி ரூ.3000 வரை வசூளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி பாந்த்ரா-குரள் பகுதியில் இருந்து தானே வரை பயணிக்க ரூ.250 என துவங்கி, மும்பை-அகமதாபாத் வரை ரூ.3000 வரை வசூளிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இந்த விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரூ.10,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும் இந்தத் திட்டப் பணிகள், வரும் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் நிறைவேறினால், மும்பையில் இருந்து 508-km  தொலைவில் உள்ள ஆகமதாபாத் நகருக்கு 2 மணி நேரத்தில் சென்று விடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த புல்லட் ரயில், மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து ஆமதாபாதில் உள்ள சபர்மதி ரயில் நிலையம் வரை இயக்கப்படவுள்ளது. 


இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் முன்னதகா தெரிவிக்கையில் "மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த புல்லட் ரயில் ஓட்டப்படும். மேலும் இதில் 10 பேட்டிகள் (coaches) பொறுத்தப்பட்டு இருக்கும்" என தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இந்த அதிவேக புல்லட் ரயிலில் பயணிக்க குறைந்தது ரூ.250 துவங்கி ரூ.3000 வரை வசூளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.