நடுவானில் நின்று போன குழந்தையின் மூச்சு... உயிரைக் காப்பாற்றிய AIIMS மருத்துவர்கள்!
ஞாயிற்றுக்கிழமை இரவு எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் ஐந்து பேர் கொண்ட குழு பெங்களூருவில் மருத்துவ நிகழ்வில் கலந்து கொண்டு டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது
புது தில்லி: ஞாயிற்றுக்கிழமை பெங்களூர்-டெல்லி விஸ்தாரா விமானத்தில் நடுவானில் சுவாசிப்பதை நிறுத்திய இரண்டு வயது குழந்தையின் உயிரை புதுதில்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) மருத்துவர்கள் குழு காப்பாற்றியது. அதே விமானத்தில் பயணம் செய்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் ஐந்து பேர் அவசர மருத்துவ சிகிச்சை அளித்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.ஞாயிற்றுக்கிழமை இரவு எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் ஐந்து பேர் கொண்ட குழு பெங்களூருவில் மருத்துவ நிகழ்வில் கலந்து கொண்டு டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அவர்கள் விஸ்தாரா விமானம் UK-814 பயணித்துக் கொண்டு இருந்தனர். விமானம் நாக்பூருக்கு திருப்பி விடப்படுவதற்கு முன்பு விமானக் குழுவினர் ஒரு பேரிடர் அழைப்பை அறிவித்தனர். இரண்டு வயதுடைய இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை, இதயத்துடிப்பை சரிசெய்வதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சுயநினைவின்றி இருந்த நிலையில், அவசர அறிவிப்பு செய்யப்பட்டது. அந்த குழந்தையின் உதடும் விரல்களும் நீல நிறத்திற்கு மாறி விட்டது.
அவசர அறிவிப்பை கேட்ட ஐந்து மருத்துவர்கள் - டாக்டர் நவ்தீப் கவுர், டாக்டர் தமன்தீப் சிங், டாக்டர் ரிஷப் ஜெயின், டாக்டர் ஓஷிகா மற்றும் டாக்டர் அவிச்சலா தக்சக் - அவசர மருத்துவ சிகிச்சையைத் தொடங்கி, குழந்தையை பரிசோதித்தனர். அந்த குழந்தையின் மூச்சு நின்று போயிருந்ததை கண்ட மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, ட்விட்டரில் பதிவிட்ட ஒரு பதிவில், "மருத்துவர்கள் சுயநினைவின்றி இருந்த குழந்தையை பரிசோதித்தனர். அதன் நாடித்துடிப்பு நின்றிருந்தது. மூட்டுகள் குளிர்ச்சியாக இருந்தன, குழந்தையின் உதட்டிலும், விரால்களிலும் நீலம் பாய்ந்திருந்தது" என்று பதிவிட்டுள்ளது.
மேலும் படிக்க | ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் பெண் ரோபோ ‘வயோமித்ரா’!
"மருத்துவர்களின் திறமையாக செயல்பட்டுகுறைந்த ஆதாரங்களுடன் உடனடி CPR சிகிச்சை தொடங்கப்பட்டது. வெற்றிகரமாக IV கானுல்லா வைக்கப்பட்டு, ஓரோஃபரிங்கீயல் காற்றுப்பாதை வைக்கப்பட்டது மற்றும் விமானத்தில் உள்ள இருந்த மருத்துவ குழுவினரால் அவசரகால சிகிச்சை தொடங்கப்பட்டது- மற்றும் குழந்தை ROSC நிலைக்கு கொண்டு வரப்பட்டது - குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது," என பதிவில் குறிப்பிடப்பட்டது. நடுவானில் குழந்தையின் உயிராஇ காப்பாற்றிய மருத்துவர்களை பலர் பாராட்டி வருகின்றனர்.
AED பயன்படுத்தப்பட்ட மற்றொரு இதயத் தடுப்பு மூலம் நிலைமை சிக்கலானது. 45 நிமிடங்களுக்கு, குழந்தை உயிர்ப்பிக்கப்பட்டு, விமானம் நாக்பூருக்கு அனுப்பப்பட்டது. நாக்பூரை அடைந்ததும், குழந்தை "நிலையான ஹீமோடைனமிக்" என்னும் மருத்துவ முறையில் மேலும் சிகிச்சைக்காக மருத்துவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ