மும்பை: பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த அனுராக் தாக்கூரின் சர்ச்சைக்குரிய அறிக்கை எதிர்க்கட்சி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அனுராக் தாகூர் மீதான தாக்குதலை தற்போது அகில இந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி தொடுத்துள்ளார். மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், தாகூருக்கு சவால் விட்ட நிலையில், நாட்டில் எங்கோ வர சொல்கிறீர்களோ, அங்கு வருகிறேன். என்னை சுட்டு தள்ளுங்கள் என்றுக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாக்பாடாவில் உள்ள ஜூலா மைதானத்தில் "வாய்ஸ் ஆப் இந்தியா" ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய ஒவைசி, "நான் உங்களுக்கு (அனுராக் தாக்கூர்) சவால் விடுகிறேன், நாட்டில் ஏதேனும் ஒரு இடத்தை சொல்லுங்கள், அங்கு என்னை சுட்டு விடுவீர்கள் என்றால், நான் வர தயாராக இருக்கிறேன். உங்கள் அறிக்கைகள் என் இதயத்தில் பயத்தைத் தூண்டுவதில்லை, ஏனென்றால் எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் அதிக எண்ணிக்கையில் வீதிகளில் இறங்கியுள்ளனர். மேலும் அவர்கள் இந்த நாட்டைக் காப்பாற்ற முடிவு செய்துள்ளனர் என்றார்.


 



நாட்டை காப்பாற்றுவதற்கும் காந்தியின் கொள்கைகளை உயிரோடு வைத்திருப்பதற்கும் தான் இந்த போராட்டம் என்று ஒவைசி மேலும் கூறினார். அவர், "இன்று நாம் "பாஜகவை விட்டு வெளியேறு" என்ற முழக்கத்தை எழுப்ப வேண்டும். CAA என்பது இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஒரு மோசமான மற்றும் கருப்பு சட்டமாகும். அரசியலமைப்பைக் காப்பாற்றவும், காந்தி - அம்பேத்கரின் சிந்தனையைத் தக்கவைக்கவும் இந்த பெண்கள் சாலையில் போராட வந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஜின்னாவின் செய்தியை நாங்கள் நிராகரித்தோம். மோடி நாட்டின் அழகை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறார் எனக் கடுமையாக சாடினார்.


அனுராக் தாக்கூரின் கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அவரின் கருத்து தொடர்பாக தேர்தல் ஆணையம் ஷோ காஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது. அவர்களுக்கு ஜனவரி 30 மதியம் 12 மணி வரை நேரம் வழங்கப்பட்டுள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.