Kashmir Target Killing: காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து நிலைமை மோசமடைந்து வருகிறது. அங்கு ஒவ்வொரு நாளும் சாதாரண குடிமக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்படுகின்றனர். மே 31 அன்று, குல்காமில் ரஜ்னி பாலா என்ற பெண் ஆசிரியரைக் கொன்ற பயங்கரவாதிகள், இரண்டு நாட்களுக்குப் பிறகு (ஜூன் 2 அன்று) ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி மேலாளர் விஜய் குமாரைக் கொன்றனர். இப்படி நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜூன் 3-ம் தேதி முக்கியக் கூட்டம் நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோடி அரசை தாக்கிய ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி:
இந்நிலையில், காஷ்மீரில் இதுபோன்ற நிலைமைக்கு மத்திய மோடி அரசு தான் காரணம் என ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீர் பண்டிட்களின் இந்த நிலைக்கு மத்தியில் உள்ள மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும். காஷ்மீரி பண்டிட்டுகள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறுவோம் என்று கூறுகிறார்கள். அதற்கு காரணம் மோடி அரசு என்று ஒவைசி கூறியுள்ளார். காஷ்மீர் பண்டிட்களின் பாதுகாப்பை விட்டுவிட்டு தங்களை விளம்பரப்படுத்துவதில் மோடி அரசு மும்முரமாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மோடி அரசுக்கு காஷ்மீரி பண்டிட்கள் வெறும் வாக்கு வங்கி எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


மோடி அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை:
மோடி அரசின் தோல்வியால் காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மோடி அரசு நாட்டை நடத்த உள்ளதா அல்லது தங்கள் படத்தை விளம்பரப்படுத்த உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 1989 ஆம் ஆண்டு காஷ்மீரில் ஏற்பட்ட நிலைமையை மீண்டும் கொண்டு வரும் நோக்கில் மோடி அரசு செயல்படுகிறது எனக் கூறியுள்ளார். 1989 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் இருந்து மோடி அரசு எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றும் ஒவைசி கூறினார். இன்றும் ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. காஷ்மீர் மாநிலத் தலைவர்களின் கைகளை கட்டிவிட்டு, அவர்களின் தலைவர்கள் டெல்லியில் அமர்ந்துள்ளனர். பாஜக தனது சொந்த நலனுக்காக செயல்படுகிறது என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி குற்றம் சாட்டினார். 



மேலும் படிக்க: தேசிய கொடியெல்லாம் இல்லை இனி காவி கொடிதான் - சர்ச்சையை கிளப்பிய பாஜக தலைவர்


சொந்த மண்ணிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம்:
அன்றாடம் நடக்கும் கொலைகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் அவர்கள் உயிருக்கு பயந்து காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இம்மக்கள் அடுத்து நாங்களும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெகுஜன வெளியேற்றம் மட்டுமே அவர்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி.


எங்களுக்கு நீதி வேண்டும் என மக்கள் கோஷங்கள்:
கடந்த 15 ஆண்டுகளாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இங்கு நடக்கும் தொடர் கொலைகளால் பல ஆண்டுகளாக பள்ளத்தாக்கில் வசிக்கும் அரசு ஊழியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மாநில அரசுக்கு எதிராக வீதியில் இறங்கியுள்ளனர். பள்ளத்தாக்கில் உள்ள இந்து அரசு ஊழியர்கள் எங்களுக்கு நீதி வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.


மேலும் படிக்க: ஒசாமா பின்லேடன் உலகின் மிகச் சிறந்த எஞ்சினியர்: மாநில அரசு அதிகாரி சஸ்பெண்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR