காஷ்மீர் தொடர்பான இந்த கட்டுக்கதைகளும் அதன் உண்மையும் உங்களுக்குத் தெரியுமா?

ஜம்மு காஷ்மீர் தொடர்பான பல உண்மைகள் இந்திய மக்களுக்கு தெரியவில்லை. அல்லது திரித்துக் கூறப்படுகிறது. உண்மை என்ன? தெரிந்துக் கொள்ளுங்கள்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2021, 02:33 PM IST
  • காஷ்மீரின் இணைப்பு பிற மாநில இணைப்புகளில் இருந்து வேறுபட்டதில்லை
  • காஷ்மீர் இணைந்த சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகே இந்திய அரசியலமைப்பில் 370வது பிரிவு சேர்க்கப்பட்டது
  • காஷ்மீர் மகாராஜா தனக்கு வழங்கப்பட்ட சொந்த உரிமையின் அடிப்படையில் இந்தியாவுடன் இணைந்தார்
காஷ்மீர் தொடர்பான இந்த கட்டுக்கதைகளும் அதன் உண்மையும் உங்களுக்குத் தெரியுமா? title=

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1947 அக்டோபர் 26ம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் நிரந்தரமாக இணைய முடிவு செய்தது.

ஆனால் ஜம்மு காஷ்மீர் தொடர்பான பல உண்மைகள் இந்திய மக்களுக்கு தெரியவில்லை. அல்லது திரித்துக் கூறப்படுகிறது. அண்டை நாடான பாகிஸ்தானாக இருந்தாலும் சரி, நாட்டிற்குள் இருக்கும் சீர்குலைக்கும் சக்திகளாக இருந்தாலும் சரி, அவை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பொய்களை பரப்புகின்றன.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்ததாலும் காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேரவில்லை

ஜம்மு காஷ்மீர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலம் என்றும், ஆனால், பாகிஸ்தானுக்கு செல்லாமல் இந்தியாவுடன் இணைந்ததாகவும் சொல்லப்படுகிறது. உண்மையில், பிரிட்டிஷ் இந்தியா, மதத்தின் அடிப்படையில் இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது,

ஆனால் இந்திய சுதந்திரச் சட்டம் 1947 இன் கீழ், பிரிட்டிஷ் நேரடி ஆட்சியின் கீழ் உள்ள பகுதிகள் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தானாக (India and Pakistan) பிரிக்கப்பட்டன, சமஸ்தானங்கள் அல்ல என்பது அடிப்படையாக புரிந்துக் கொள்ள வேண்டிய உண்மை.

ALSO READ | Article 370 நீக்கப்பட்ட பின் உள்துறை அமைச்சர் ஜம்மு காஷ்மீர் பயணம்

சமஸ்தானங்களின் ஆட்சியாளர்கள், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதற்கு சுதந்திரமான உரிமை இருந்தது. சமஸ்தானத்தின் குடிமக்களின் மதம், இந்த விஷயத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

இதற்கு உதாரணமாக பாகிஸ்தானில் உள்ள ஒரு நகரைச் சொல்லலாம். ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் மற்றும் ஜோத்பூருக்கு அருகிலுள்ள அமர்கோட் சமஸ்தானம் பாகிஸ்தானுடன் இணைந்தது. இந்த சமஸ்தானத்தில்தான் முகலாய பேரரசர் அக்பர் பிறந்தார், அது தற்போது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் ஒரு பகுதியாக உள்ளது. 

இந்தியப் பிரிவினையின் போது அமர்கோட்டின் மக்களில் 90% மற்றும் அதன் மன்னர்கள் இந்துக்களாகவே இருந்தனர். ஆனாலும் அன்றைய அரசர், பாகிஸ்தானுடன் இணைவதற்கான முடிவை எடுத்து, அதற்கேற்றாற்போல இயங்கினார். 

அதற்கான காரணம் இயற்கையாக அமர்கோட் சமஸ்தானம் அமைந்திருந்த இடம் தான் என்பது வரலாற்று உண்மை. அன்றைய அமர்கோட் சமஸ்தானத்தின் இன்றைய பெயர் உமர்கோட். பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியதால் பெயர், இந்து பெயர், இஸ்லாமிய பெயராக மாற்றம் செய்யப்பட்டது.

jammu

காஷ்மீரின் இணைப்பு பிற மாநில இணைப்புகளில் இருந்து வேறுபட்டது சட்டப்பிரிவு 370 சுதந்திரத்தின்போதிருந்தே தொடர்ந்தது

பிற சமஸ்தானங்களை போலவே காஷ்மீரும் இணைக்கப்பட்டது. இணைப்பு தொடர்பான ஆவணங்களின் வரைவு அனைத்து சமஸ்தானங்களுக்கும் ஒரே மாதிரியாக இருந்தது. இதனுடன், கடைசி வைஸ்ராய் லார்ட் மவுண்ட்பேட்டனும் அனைத்து சமஸ்தானங்களுக்கும் இரண்டு நிபந்தனைகளை வைத்தார். 

குறிப்பிட்ட ஒரு சமஸ்தானத்தின் புவியியல் அமைவிடம் மற்றும் சமஸ்தான மக்களின் பெரும்பான்மையினரின் விருப்பம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதே அந்த இரண்டு நிபந்தனைகளும் ஆகும். காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபோது, அதுதொடர்பான ஆவனத்திலேயே சட்டப்பிரிவு 370வது பிரிவு இருந்தது என்று கூறப்படுகிறது.

ஆனால், இது உண்மையல்ல! இணைப்பு ஆவணத்தில் எந்த நிபந்தனையும் இல்லை. காஷ்மீர் இணைந்த சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகுதான், இந்திய அரசியலமைப்பில் 370வது பிரிவு (Article 370) சேர்க்கப்பட்டது என்பதே உண்மை.

Also Read | ஜம்மு -காஷ்மீர் விவகாரத்தில் பாஜக தோல்வி - கடுமையாக விமர்சித்த சிவசேனா

காஷ்மீர், ஜூனாகத், ஹைதராபாத்

ஜுனாகத், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே திரைமறைவில் சில ஒப்பந்தங்கள் இருந்ததாக ஒரு கட்டுக்கதை உண்டு. உண்மை என்ன தெரியுமா? இந்த மூன்று சமஸ்தானங்களும் மவுண்ட்பேட்டன், அந்தந்த ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனைகளின்படியே இணைக்கப்பட்டன. 

ஜூனாகத் மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு சமஸ்தானங்களுமே புவியியல் ரீதியாக பாகிஸ்தானுடன் அருகில் இல்லை, எனவே அந்த சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைய வேண்டியிருந்தது. காஷ்மீர் மகாராஜா தனக்கு வழங்கப்பட்ட சொந்த உரிமையின் அடிப்படையில் இந்தியாவுடன் இணைந்தார்.

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள சமஸ்தானங்களை இணைக்கும் அதிகாரம் அந்தந்த சமஸ்தானங்களின் ஆட்சியாளருக்கு மட்டுமே இருந்தது. 

ஆனால் சமஸ்தானத்தின் அரசரின் முடிவுடன் மக்களிடமிருந்து இறுதி ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதை இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம் கொள்கையாகக் கொண்டிருந்தது. இது ஜனநாயக விழுமியங்களின்படி இணைப்புச் செயல்பாட்டில் பொதுமக்கள் பங்கேற்பதற்கும் வழிவகுக்கும் என்று நம்பப்பட்டது.

அதன்படி, அனைத்து சமஸ்தானங்களையும் போலவே, ஜம்மு காஷ்மீர் மக்களும் தங்கள் ஆட்சியாளரின் முடிவுக்கு இறுதி உத்தரவை வைக்க வேண்டியிருந்தது. ஜம்மு காஷ்மீர் உட்பட இந்தியாவுடன் இணைந்த அனைத்து சமஸ்தானங்களும் இந்தக் கொள்கையைப் பின்பற்றின. 

ஜம்மு காஷ்மீரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 பிரதிநிதிகள், 1954 பிப்ரவரி 15 அன்று  இந்தியாவுடன் சமஸ்தானத்தை இணைக்க அதிகாரப்பூர்வ மற்றும் இறுதி ஒப்புதல் அளித்தனர். காஷ்மீர் இணைப்புக்கு மக்கள் பிரதிநிதிகள் ஒப்புதல் அளித்த பிறகு, அங்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சட்டவிரோதமானது.

jammu

1947 ஆகஸ்ட் 15 க்கு பிறகும் காஷ்மீர் சுதந்திர நாடாக இருந்தது

இந்திய சுதந்திரத்திற்கு பிறகும் காஷ்மீர் ஒரு சுதந்திரமான சமஸ்தானமாக இருந்தது என்றும் ஒரு கட்டுக்கதை உண்டு. இந்திய சுதந்திரச் சட்டம் 1947இன் கீழ், பிரிட்டிஷ் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பிரித்தானியப் பேரரசரின் அதிகாரம், சமஸ்தானங்களில் இருந்தும் முடிவுக்கு வந்திருக்கும். சமஸ்தானங்கள் சுதந்திரமாக மாறியிருக்கும் என்றும் சொல்ல முடியாது.

ஏனென்றால், சமஸ்தானங்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சி அமைப்பில் ஒரு பகுதியாக இருந்ததைப் போலவே, சுதந்திரத்திற்குப் பிறகும், இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

காஷ்மீர் இணைப்பு பற்றிய சர்ச்சை ஐக்கிய நாடுகள் சபையில் (UN)பரிசீலனையில் உள்ளது

இந்தியாவில் காஷ்மீர் இணைந்தது தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் ஐ.நாவில் என்றுமே இருந்தது இல்லை. காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவே முதல் முறையாக ஐ.நா.விடம் கொண்டு சென்றது. ஆனால், அது, பாகிஸ்தானின் படையெடுப்பு மற்றும் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பானது.

Also Read | காஷ்மீர் இளைஞர்களை மூளைசலவை செய்து பயங்கரவாத செயலில் ஈடுபடுத்த ISIS-K திட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 35வது பிரிவின் அடிப்படையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள மிர்பூர், முசாபராபாத், கில்கிட் போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்பை கைவிடுமாறு ஐ.நா. பாகிஸ்தானுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

போருக்கு வழிவகுக்கும் இந்த ஆக்ரமிப்பை செய்த பாகிஸ்தானிடம் இருந்து தனது பகுதிகளை விடுவிக்க ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தரப்பில் கூறப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் (Second World War) தாக்கத்தை உலகம் ஏற்கனவே சந்தித்திருந்தது, எனவே போரையும், யுத்தத்தினால் ஏற்படும் சேதத்தையும் தவிர்க்க வேண்டும் என்றால், ஐ.நா. பாகிஸ்தானுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று இந்தியா தெரிவித்தது.

இந்த விவகாரத்தை 1948 பிப்ரவரி 4ஆம் தேதியன்று  ஷேக் அப்துல்லாவும், பின்னர் 1957 ஜனவரி 23 மற்றும் 24ம் தேதிகளிலும் வி.கே.கிருஷ்ண மேனனும் ஐ.நாவில் முன்வைத்தனர்.

அதே நேரத்தில், 1971 போரில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த பிறகு, இரு நாடுகளும் சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான எந்தவொரு பிரச்னைக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. 

ஐநா சாசனத்தின்படி, இரண்டு போட்டி நாடுகள் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதை இரு நாடுகளின் நாடாளுமன்றங்களும் அங்கீகரித்தன. இதன் பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் பங்கு முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, அதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவுகள் ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும். அதன்படி, ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது இந்தியா புகார் அளித்த விவகாரமும் முடிவுக்கு வந்து, விவகாரம் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதாக மாறியது.

Also Read | இந்து சமய அறநிலையத்துறை மூலம் கல்லூரி தொடங்க தடை இல்லை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News