தெலுங்கானா மாநில சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவராக மாநில AIMIM கட்சியின் தலைவரான அக்பருதீன் ஓவாய்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த குழுவின் மற்ற உறுப்பினர்களாக காங்கிரஸ் MLA டி.ஸ்ரீதர் பாபு மற்றும் த.தே.கூவின் சாண்ட்ரா வெங்கட்ட வீரையா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


தெலுங்கானா சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 18 உறுப்பினர்கள் இருந்த நிலையில், ஒரு எம்எல்ஏ மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவைக்கு சென்றுவிட்டார். இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 17 ஆக குறைந்தது.


இந்த 17 பேரில் 12 பேர் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி யில் சேர்ந்துவிட்டனர். அதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் தற்போது 5-ஆக குறைந்து விட்டது.


தெலுங்கானா சட்டப்பேரவையில் AIMIM கட்சிக்கு மொத்தம் 6 உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே எதிர்க்கட்சி அந்தஸ்து இப்பொழுது அந்த கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.


ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் கூட்டணிக் கட்சியான AIMIM கட்சிக்கு இப்பொழுது எதிர்க்கட்சி அந்தஸ்து தானாக வந்துள்ள நிலையில், எதிர்க்கட்சி அந்தஸ்தை தொடர்ந்து மாநில பொது கணக்கு குழு தலைவர் பதவியும் இப்பொழுது அந்தக் கட்சியைச் சேர்ந்த அக்பருதீன் ஓவாய்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்தத் தகவலை தெலுங்கானா சட்டமன்ற தலைவர் சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று அறிவித்தார்.