விமான நிலையத்தில் நடந்த பகீர் சம்பவம்; விமானியின் சாதுர்யத்தால் தப்பிய உயிர்கள்
விபத்திற்குள்ளான ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில், 2 பணியாளர்கள், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு நோயாளி உட்பட ஐந்து பேர் இருந்தனர். மும்பை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நாக்பூரிலிருந்து ஹைதராபாத்திற்கு சென்ற ஏர் ஆம்புலன்ஸ், டேக் ஆப் ஆகும் போது, அதன் சக்கரம் ஓடுபாதையில் கழன்று விழுந்தது. இதன் பின்னர், அந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜெட்ஸெர்வ் ஏவியேஷன் இயக்கும் ஏர் ஆம்புலன்ஸ், சிC-90 Air Craft VT-JIL விமானத்தின் முன் சக்கரம் ஒன்று, விமானம் நாக்பூரில் டேக் ஆப் ஆகும் போதே, கழன்று விழுந்து விட்டது.
இந்த ஆம்புலன்ஸ் விமானத்தில், 2 பணியாளர்கள், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு நோயாளி உட்பட ஐந்து பேர் விமானத்தில் இருந்தனர். மும்பை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.மும்பையில் விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை 27 இல் விமானம் தீ பிடிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மும்பை விமான நிலையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் மற்றும் விமான நிலையத்தில் அனைத்து விமானங்கள் வரும் மற்றும் புறப்படும் நேரத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.
ஜெட்ஸர்வ் ஆம்புலன்ஸ் விமானம் நோயாளியுடன் நாக்பூரிலிருந்து புறப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியது. ஆனால் அதன் முன் சக்கரம் கழன்று விழுந்தது. உடனடியாக கேப்டன் கேசரி சிங் தனது உறுதியான மனதுடன், சாதுர்யமாக விமானத்தை மும்பையில் தரையிறக்கினார். விமானத்தில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். டி.ஜி.சி, மும்பை விமான நிலையம் மற்றும் பிறரின் முயற்சிகளைப் பாராட்டியது.
ALSO READ ஆக்ஸிஜன் செறிவு அளவு 92 என குறைந்தால் பதற்றம் அடைய வேண்டாம்: AIIMS இயக்குநர்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR