மும்பையில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏஐ 864 என்ற விமானம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் டெல்லிக்கு கிளம்ப தயாரானது. அப்போது அந்த விமானத்தில் இருந்த 53 வயது பணிப்பெண் விமானத்தின் கதவை மூடும் போது கீழே தவறி விழுந்தார்.


விமானத்தில் இருந்து கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். தற்போது அவரை மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிகப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.