புது தில்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயைச் சமாளிக்க நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவடைய உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லாக்-டவுன் மேலும் விரிவுபடுத்தும் என்ற செய்தி வெளியானது. ஆனால் அது மத்திய அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் ஏர் இந்தியா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை இந்த அச்சங்களை வலுப்படுத்துகிறது. நேற்று முதல் ஏப்ரல் 30 வரை அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களுக்கான முன்பதிவு மூடப்பட்டுள்ளதாக அரசு விமான நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.


 



சமூக ஊடக அறிக்கைகளில் வெளியான செடியை அடுத்து கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் உத்தரவிடப்பட்ட லாக்-டவுன் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியிருந்தது. ஊரடங்கு உத்தரவு காலத்தை அதிகரிக்க அரசாங்கத்திற்கு எந்த திட்டமும் இல்லை என்று அமைச்சரவை செயலாளர் ராஜீவ் காபா மார்ச் 30 அன்று தெளிவுபடுத்தினார். அவர், 'லாக்-டவுன் நாட்களை அதிகரிப்பதற்கான அறிக்கையைப் பார்த்து நான் அதிர்ச்சியடைகிறேன். அரசாங்கத்திற்கு அத்தகைய திட்டம் எதுவும் இல்லை எனக் கூறினார். 


இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பார்த்தால், லாக்-டவுன் காலத்தை அதிகரிப்பதை அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று தகவல்கள் வந்துள்ளன. ஆனாலும் மத்திய அரசாங்கம் ஏற்கனவே தெளிவுப்படுத்தி உள்ளது.


இந்தியாவில் இதுவரை 2,457 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 62 பேர் இந்த கொடிய நோயால் இறந்துள்ளனர்.