Air India சர்வர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து பல Air India விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன!



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லியில் இருக்கும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்படவேண்டிய பல Air India விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டது. Air India சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக Air India நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Air India விமானத்தின் காலதாமதம் குறித்த தகவல் அறிந்த பயணிகள், நிர்வாகத்தினை விமர்சிக்கும் வகையில் வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 


இதுகுறித்து ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் தலைமை நிர்வாகி அகிலேஷ் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..



"தற்போது தான் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தேன். பின்னரே AirIndia விமானங்களின் காலதாமத அறிவிப்பினை அறிந்தேன். கடந்த 2 மணி நேரங்களாக அனைத்து உள்ளூர், வெளியூர் விமானங்கள் விமான நிலையத்திலேயே தேங்கியுள்ளது. திருவிழா கூட்டத்தில் இருக்கும் கடைகள் போல் விமானங்களும், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர் போல் விமானத்தை சுற்றி பயணிகளுமாய் பிரம்மாண்ட காட்சி தெரிகிறது" என பதிவிட்டுள்ளார்!