வந்தே பாரத் மிஷனின் மூன்றாம் கட்டத்தின் கீழ், ஏர் இந்தியா (Air India) வெள்ளிக்கிழமை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுமார் 300 விமானங்களை முன்பதிவு செய்யத் தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்பதிவு தொடங்கியவுடன், பயணிகளிடமிருந்து "அதிகப்படியான" வரவேற்பு கிடைத்து, முதல் இரண்டு மணி நேரத்தில் 60 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றது. இதன் காரணமாக டிக்கெட் முன்பதிவு வலைத்தளம் ஆரம்பக்கட்டத்தில் ஸ்தம்பிக்க துவங்கியது.


Vande Bharat Mission: ஜூன் 11 முதல் அமெரிக்கா, கனடாவுக்கு மேலும் 70 விமானங்களை ஏர் இந்தியா இயக்கம்...


இந்நிலையில் பல பயணிகள் சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர், திறந்த நேரத்தில் ஏர் இந்தியா வலைத்தளம் சரியாக செயல்படவில்லை என்றும் பெரும்பாலான விமானங்களுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றும் பதிவுகளை வெளியிட்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.


ஏர் இந்தியா வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு தனது முன்பதிவு செயல்பாட்டை தொடங்கியது, தொடர்ந்து மாலை 6.8 மணிக்கு ட்விட்டரில் "மிஷன் வந்தே பாரத் -3 இன் கீழ் இருக்கைகளுக்கான தேவை அதிகமாக உள்ளது. இணையதளத்தில் விமானங்களுக்கான முன்பதிவு ஒரு கட்டமாக திறக்கப்படுகிறது." என குறிப்பிட்டு பதிவிட்டது.




வழித்தடத்திற்கு ஏற்ப டிக்கெட் விலை!! 3.5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விமான கட்டணம்...


அதற்கு பதிலளித்த விக்கி ரவி என்ற பயணி, “நான் கடந்த ஒரு மணி நேரமாக விமானத்தில் இருக்கை முன்பதிவு செய்ய முயற்சிக்கிறேன், உங்கள் வலைத்தளம் செயலிழந்துவிட்டது. முன்பதிவு செய்ய எனக்கு உதவுங்கள். " என குறிப்பிட்டுள்ளார்.


இந்தியா பயணத்தின் மூன்றாம் கட்டத்தின் போது ஜூன் 10 முதல் ஜூலை 1 வரை ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏர் இந்தியா வந்தே 300 விமானங்களை இயக்கவுள்ளது. இந்நாட்டில் வசிக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் நாடு திரும்ப மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.