துபாயில் இருந்து லக்னோ பயணம் மேற்கொண்ட Air India விமானத்தில் நேற்றய தினம் பயணித்த பயணி ஒருவர், திடீரென விமானத்தில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெயர் குறிப்பிடப்படாத இப்பயணி, பயணத்தின் பாதி வழியில் தனது ஆடைகளை அகற்றி நிர்வாணமாக பயணிகளுக்கு காட்சியளித்துள்ளார். அதிர்ச்சியில் ஆழ்ந்த விமான பணியாட்கள் விரைந்து போர்வை கொண்டு அவரை மறைத்தனர்.


பின்னர் விமான பயணிகள் இருவர் உதவியுடன் அவரை இருக்கையில் அமை வைத்தனர். எஞ்சிய பயணத் தொலைவினை அவர் இருக்கையில் அமர்ந்தப்படியே பயணிக்கும் படி பணிக்கப்பட்டார். 



இந்த சம்பவமானது Air India விமானம் IX-194 நிகழ்ந்துள்ளது. சுமார் 150 பயணிகள் பயணித்த இந்த விமானம் நள்ளிரவு 12.05 மணியளவில் லக்னோவில் தரையிறங்கியது. பின்னர் இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட பயணி, நிலைய காவலர்களிடன் ஒப்படைக்கப்பட்டார்.


இதுகுறித்து Air India செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில்.... விமானியின் வழிகாட்டுதல் படி குற்றம் புரிந்த பயணி நிலைய காவலர்களிடன் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் குறிப்பிட்ட விமானம் லக்னோவில் இருந்து துபாய்-க்கு விடியற்காலை 02.05 மணியளவில் திரும்பியது என தெரிவித்துள்ளார்.