புது டெல்லி: துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express flight crash) விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையை தாண்டி, அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடி (PM Narendra Modi) கூறியதாவது, "கோழிக்கோட்டில் ஏற்பட்ட விமான விபத்தால் எனக்கு மிகுந்த வலி ஏற்பட்டுள்ளது. என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களிடம் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். இந்த விபத்து குறித்து கேரள முதல்வரிடம் பேசினேன். 


அவர் தொடர்ந்து நிலைமை குறித்து கண்காணித்து வருகிறார். அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைத்து உதவிகளையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.


 



இவ்வாறு பதிவிட்டுள்ளார்.