விமானத்தில் பயணிகளின் அத்துமீறலை தடுக்க புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ள ஏர்இந்தியா, இதுபோன்ற பயணிகளுக்கு அபராதம் விதிக்க மேற்கொள்ள முடிவு செய்து உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமானத்திற்கு ஒரு மணிநேரம் காலதாமதம் ஏற்பட்டால் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஏர் இந்தியா முடிவு செய்து உள்ளது. 


ஒரு மணி நேரத்திற்கு மேல் 2 மணி நேரத்திற்குள் காலதாமதம் ஆனால் ரூ. 15 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும். அதற்கு மேல் காலதாமதம் ஆனாலும் பயணிகளுக்கு ரூ. 15 லட்சம் அபராதம் விதிக்க என ஏர்இந்தியா முடிவு செய்து உள்ளது என ஏர்இந்தியா திட்டமிட்டு உள்ளது. 


மத்திய அரசு வெளியிட்ட ஏர் டிராபிக் தரவு தகவலின்படி இந்திய விமான நிறுவனங்களால் விமானத்தில் ஏற பயணிகள் தடை செய்யப்பட்ட சம்பவமானது ஒரு வருடத்திற்குள் இரட்டிப்பாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கடந்த 2016 ஏப்ரல் முதல் 2017 பிப்ரவரி வரையில் இதுபோன்று 18,242 பயணிகள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை என மத்திய அரசு தகவல்கள் தெரிவித்து இருந்தன.