புதுடெல்லி: ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் பிற விமானங்களில் பயணம் செய்யும் உள்நாட்டு பயணிக்கு ஒரு நல்ல செய்தி!  இது விமான நிறுவனங்களுக்கும் நல்ல செய்திதான் என்று எமது நிருபர் அனில் சிங்வி தெரிவிக்கிறார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்பைஸ்ஜெட் (SpiceJet), இண்டிகோ (IndiGo) மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து புத்தாண்டு முதல் இயல்பாகிறது. உள்நாட்டு போக்குவரத்து நிறுவனங்கள் 100 சதவீத திறனுடன் செயல்பட அரசாங்கம் அனுமதிக்கும் என்று எமது நிருபர் கூறுகிறார்.  


இந்த நல்ல செய்தி விமான அமைச்சகத்திலிருந்து விரைவில் வெளியிடப்படக்கூடும் என்று எமது நிருபர் கூறுகிறார்: "சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் மறுஆய்வுக் கூட்டத்தில், ஜனவரி 2021 முதல், அனைத்து உள்நாட்டு விமான நிறுவனங்களும் தங்கள் 100 சதவீத திறனுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இது அனைத்து விமான நிறுவனங்களும் தங்கள் நெட்வொர்க் திறனில் 100 சதவீதத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும்.” 


Also Read | 70 லட்சம் ஊழியர்களின் தரவு leak ஆனது 


உள்நாட்டு விமான நிறுவனங்களான ஸ்பைஸ்ஜெட் (SpiceJet), இண்டிகோ (IndiGo) கோ ஏர் (GoAir) விஸ்டாரா ஏர்லைன்ஸ் (Vistara Airlines) ஆகியவை சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் இந்த செய்தி மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும்.   ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ நிறுவன்ங்களுக்கு இந்த முடிவு அதிகபட்ச நன்மைகளைக் கொடுக்கும். பங்குச் சந்தையில் ஏற்கனவே விமான நிறுவன்ங்களின் பங்கு விலை ஏற்கனவே 5 சதவீதத்தைப் பெற்றுள்ளது.


இந்த விமான நிறுவனங்களுக்கு 100 சதவீத செயல்பாட்டு திறனை வழங்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (civil-aviation-ministry) முடிவு எடுக்க இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. "முதல் காரணம் ஜனவரி மாதத்திற்கு முன்னர் கோவிட் 19 தடுப்பூசி கிடைக்கும் என்று அமைச்சகம் எதிர்பார்க்கிறது. எனவே, விமானப் பயணம் மேற்கொள்பவர்கள் கோவிட் 19 தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்ப்டலாம். இது கோவிட் பரவுதலை தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இரண்டாவதாக, கொரோனா வைரஸ் (Coronavirus)பரவலின் அதிர்ச்சிகள் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து வெளியே வந்த மக்களில் கணிசமானவர்கள் இப்போது விமானப் பயணத்தை மேற்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். ஏற்கனவே நெட்வொர்க் திறனில் 80 சதவீதம் அளவிற்கு செயல்பட அரசாங்கம் விமான நிறுவனங்களுக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முழுத் திறனுடன் விமானங்கள் செயல்பட அனுமதி கொடுப்பது நல்ல அறிகுறி தான்.  


Also Read | டிக்கெட் புக்கிங்கில் புதிய மாறுதல்களை செய்தது IRCTC


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR