விடாது பெய்துவரும் தொடர் மழை காரணமாக மும்பை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகராஷ்டிர மாநிலம் மும்பையில் வரலாறு காணாத தொடர் மழை பொழிந்து வருகிறது. இரவிலும், பகலிலும் நாள் முழுவதும் மழை பெய்து கொண்டே இருக்கின்றது, இதனால் இங்கு இருந்து கிளம்பும், வந்து சேரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை காரணமாக மும்பை மற்றும் புறநகர் ஸ்தம்பித்து போன நிலையில் விமான நிலைத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிச்சம் மிக குறைவாக இருப்பதாகவும் இதனால் நிலையம் மூடப்பட்டிருப்பதாகவும் நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


இது போல் பல்கார், தானே, ராய்காட் பகுதிகளில் இன்று காலை முதல் பெய்த மழையால் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டி வரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு உள்ளது. இந்த பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. சாலைகள், தெருக்களிலும் மழைவெள்ளம் தேங்கி உள்ளது.


விடாமல் பொழிந்து வரும் கனமழையால் நகர பகுதிகள் மற்றும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.  வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.ரெயில் நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. மாட்டுங்கா, சயான், கல்வா, தானே, நாலச்சோப்ரா, பால்கர் ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின.