மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்துள்ள நிலையில்., அஜித் தங்களுடன் இருப்பதாக சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் மகாராஷ்டிராவின் முதல்வர் அஜித் பவார் தான் எனவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் முதல்வராக இருப்பார் எனவும் சஞ்சய் ரவுத் குறிப்பிட்டுள்ளார்.


மகாராஷ்டிராவில் நடந்து வரும் அரசியல் மோதல்களுக்கு மத்தியில் ஒரு பெரிய செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, நாளை பாஜக தலைமையிலான அரசு பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், துணை முதல்வர் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இன்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்று கூறப்படுகிறது. பிற்பகல் பட்னாவிஸ் ஊடக சந்திப்பு நடத்தவுள்ள நிலையில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே NCP-காங்கிரஸ்-சிவசேனா MLA-க்களுடன் சந்திப்பு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான உச்சநீதிமன்ற முடிவு காலை வெளியாகியுள்ள நிலையில் மகாராஷ்டிரா அரசியல் களத்தில் பதற்றம் ஒட்டிக்கொண்டுள்ளது.


இந்த பரபரப்பான சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவர் சரத் பவார் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் சந்திப்பு நடத்தியுள்ளனர். இந்த நேரத்தில், ஷரத் பவார் தனது மருமகன் அஜித்தை மன்னித்து இப்போது திரும்பி வரும்படி கூறியதாக தெரிகிறது. இந்த சந்திப்பினை அடுத்து அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மகாராஷ்டிராவின் அரசியல் போராட்டம் குறித்து இன்று உச்ச நீதிமன்றம் ஒரு பெரிய முடிவை அளித்துள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் நாளை மாலை 5 மணியளவில் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த பெரும்பான்மை விசாரணைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும், நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் மாநிலத்தில் அரசியல் பரபரப்பு தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.