உங்களுக்கு 83 வயதாகிறது... இனி ரெஸ்ட் எடுங்க... சரத் பவாரை கிண்டல் செய்யும் அஜித் பவார்!
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் உள்ளிட்டோர், கட்சியில் இருந்து விலகி ஆளும் பாரதீய ஜனநாயக கட்சிக் கூட்டணியில் இணைந்தனர்.
மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் உள்ளிட்டோர், கட்சியில் இருந்து விலகி ஆளும் பாரதீய ஜனநாயக கட்சிக் கூட்டணியில் இணைந்தனர். இதை தொடர்ந்து சிவசேனா- பாஜக கூட்டணி அரசின் துணை முதலமைச்சராக அஜித்பவார் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், மகாராஷ்டிர துணை முதல்வரும், என்சிபி கிளர்ச்சிப் பிரிவுத் தலைவருமான அஜித் பவார், தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் இருந்து இப்போது ஓய்வு பெற வேண்டும் என்று தனது மாமாவும் கட்சி நிறுவனருமான சரத் பவாரை புதன்கிழமை கிண்டல் செய்தார். "உங்களுக்கு 83 வயதாகிறது, நீங்கள் இப்போதாவது நிறுத்துவீர்களா? இப்போது ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று அஜித் பவார் தனது ஆதரவாளர்கள் மற்றும் அவரது கோஷ்டியின் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் அவரது மாமாவும் ஆன சரத் பவாரை கிண்டல் செய்த அஜித் பவார், "எல்லோர் முன்னிலையிலும் என்னை வில்லனாக சித்தரித்தீர்கள். அவர் மீது (சரத் பவார்) எனக்கு இன்னும் ஆழ்ந்த மரியாதை உண்டு... ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். .அரசியலில் கூட, பாஜக தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் உதாரணத்தை நீங்கள் பார்க்கலாம்... இது புதிய தலைமுறையை முன்னுக்கு வர அனுமதிக்கிறது... நீங்கள் (சரத் பவார்) எங்களுக்கு உங்கள் ஆசீர்வாதங்களை வழங்குங்கள். உங்களுக்கு 83 வயதாகிறது, நீங்கள் இப்போதாவது ஓய்வு எடுக்க வேண்டும் அல்லவா?.... உங்கள் ஆசிகளை எங்களுக்குக் கொடுங்கள், நீங்கள் நீண்ட காலம் வாழ பிரார்த்திப்போம் " என்றார்.
மேலும் படிக்க | டீஸ்டா செடல்வாட்டுக்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கியது SC: பின்னணி என்ன?
2017 ஆம் ஆண்டில், என்சிபி பாஜகவுடன் கைகோர்க்க முயற்சித்ததாகவும், ஆனால் பாஜக கட்சி சிவசேனாவை கைவிட மறுத்ததாகவும் அஜித் பவார் கூறினார். “2017 ஆம் ஆண்டில், இலாகா பகிர்வை இறுதி செய்ய தேவேந்திர ஃபடன்விஸ், சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு சரத் பவார் எங்களிடம் கூறினார். நான், சுனில் தட்கரே, ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் கலந்துகொண்டோம். டெல்லியில் பவார் பாஜக உயர் அதிகாரிகளை சந்தித்தார். சிவசேனாவை கைவிட மாட்டோம் என்று கூறிய பாஜக, 3 கட்சி ஆட்சியை அமைக்கச் சொன்னது. அதற்கு சரத் பவார் உடன்படவில்லை, சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க மாட்டோம் என்று அஜித் பவார் கூறினார்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சித்த சரத் பவாருக்கு பெருத்த பின்னடைவை தரும் வகையில், அவரது கட்சியான தேசியவாத காங்கிரசின் 40 MLAக்கள் மகாராஷ்டிராவில், ஆளும் பாஜக - ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதன் மூலம் சரத்பவாரின் தேசியவாத கட்சி இரண்டாக உடைந்து அதன் பெரும்பாலான MLAக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளதால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பவாரின் முயற்சியின் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு நடைபெறும் மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி கட்சியையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார் உத்தவ் தாக்கரே. மகாராஷ்டிராவின் முக்கிய கட்சியான தேசியவாத காங்கிரசும் 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் உள்ளது. ஆனால், தற்போதைய இந்த நிகழ்வு இருவருக்கும் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பாம் வைக்க ரோபோடிக்ஸ் படிப்பு... ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கர்நாடகாவில் சதித்திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ