ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா துறை...?
மகாராஷ்டிரா அமைச்சரவை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட இருப்பதாகவும், இதில் துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதி இலாகா அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன!
மகாராஷ்டிரா அமைச்சரவை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட இருப்பதாகவும், இதில் துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதி இலாகா அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன!
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரை அன்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. எனினும் அமைச்சர்களுக்கான இலாகா இதுவரை ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கப்பட இருப்பதாகவும், துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதி துறை, கேபினேட் அமைச்சர் ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா துறை அளிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் NCP தலைவர் அனில் தேஷ்முக் மாநிலத்தின் புதிய உள்துறை அமைச்சராக ஆக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
29 வயதான ஆதித்யா தாக்கரே மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனும், தாக்கரே குலத்தைச் சேர்ந்த முதல் நபராக போட்டியிட்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். அஜித் பவார், NCP தலைவரான சரத் பவாரின் சகோதன் மகன் ஆவார். அவர் இந்த ஆண்டு இரண்டு முறை துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான குறுகிய கால அரசாங்கத்தை அமைப்பதற்காக பாஜக-வுடன் கைகோர்க்க அவர் NCP-யிலிருந்து குறுகிய கால இடைவெளிக்கு விலகி பின்னர் தனது வழிகாட்டியிடமே திரும்பியது குறிப்பிடத்தக்கது. இந்த கால இடைவெளியில் அவர் துணை முதல்வராக பதவியேற்றதும் குறிப்பிடத்தக்கது.
'மகா விகாஸ் அகாதி' என்று அழைக்கப்படும் சிவசேனா, NCP மற்றும் காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் முதல்வராக உத்தவ் பதவியேற்ற 32 நாட்களுக்குப் பிறகு இந்த இலாகா ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது, அமைச்சில் முதல்வரைத் தவிர ஏழு உறுப்பினர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு... ஒரு தற்காலிக முழு பட்டியலாக இங்கே.
ஆதித்யா தாக்கரே (சிவசேனா): சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா
அனில் பராப்: CMOஅமைச்சகம்
சுபாஷ் தேசாய், சிவசேனா - தொழில் துறை
உதய் சாவந்த்: போக்குவரத்து துறை
பாலாசாகேப் தோரத்: வருவாய் அமைச்சகம்
அசோக் சவான்: பொதுப்பணித்துறை
யஷோமதி தாக்கூர்: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்
அமித் தேஷ்முக்: பள்ளி கல்வி
சுனில் கேதார்: OBC அமைச்சகம்
அஜித் பவார்: நிதி அமைச்சகம்
ஜெயந்த் பாட்டீல்: நீர்வளம்
சாகன் பூஜ்பால்: சிவில் சப்ளைஸ்
அனில் தேஷ்முக்: உள்துறை அமைச்சகம்
திலீப் வாஸ் பாட்டீல்: கலால் துறை
தனஞ்சய் முண்டே: சமூக நீதி
ஹசன் முஷ்ரிஃப்: கிராம மேம்பாடு
பாலாசாகேப் பாட்டீல்: ஒத்துழைப்பு அமைச்சகம்
ராஜேந்திர ஷிங்னே: சுகாதார அமைச்சகம்
ராஜேஷ் டோப்: உயர் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
ஜிதேந்திர அவாத்: குடியியல் மேம்பாட்டு துறை.
நவாப் மாலிக்: தொழிளாலர் மாநாடு.